கோழி பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. தீபாவளி டிப்ஸ்....சகோதரிகளுக்காக,...எச்சரிக்கை!
    DRESSING ROOM ல் கேமரா மறைத்து வைக்கப்பட்டு
    பெண்கள் படம் பிடிக்க படுகின்றனர்..!
    அதை தடுக்க ஒரு அருமையான ஆலோசனை.
    TRIAL ROOM ல் உங்களோட செல் போன்ல இருந்து யாருக்காவது கால் பண்ணுங்கள்,
    உங்கள் போனில் இருந்து கால் பண்ண முடியவில்லை என்றால் அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்'.
    காரணம் FIBER OPTIC SIGNAL செல் போன் சிக்னலை தடுக்க கூடியது..!
    அப்படி கால் பண்ண முடியவில்லை என்றால்... உஷார்..!!!
    நீங்கள் நோட்டமிடபடுகிறீர்கள்....!!!

    ReplyDelete
  2. கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோடைகால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும்.இதை கொக்கு நோய் என்றும் கூறலாம்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்புமண்டலமும் பாதிக்கப்படும். இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம் எடுக்காது.தண்ணீர் குடிக்காது.வெள்ளையாக கழியும். எச்சமிடும்போது ஒரு காலை தூக்கிகொள்ளும்.ஒரு இறக்கை மட்டும் செயலிழந்து தொங்கும்.

    வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க குஞ்சு பொரித்த 7 நாட்களில் RDVF அல்லது Lasota என்ற் தடுப்பூசியை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் கண்ணில் விடவேண்டும்.இந்த தடுப்பு மருந்து இரண்டு மாதம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். 2 மாத வயதிற்க்கு பிற்கு RDVK என்ற் தடுப்பூசியை 8 சொட்டுகளை இறக்கையின் தோலுக்கடியில் போட வேண்டும். இந்த தடுப்பு மருந்து ஒரு வருடம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.பிறகு ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி போடவேண்டும்.

    ReplyDelete
  3. நாட்டுகோழி பண்ணை அமைக்கும் நண்பர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.இன்றைய நிலையில் ஆர்கானிக்,ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை உணவு முறைகளை நாடி செல்லும் நிலையில், இயற்கையாக கிடைக்கும் நாட்டு கோழிகளுக்கு இனி வரும் காலங்களில் நல்ல கிராக்கி உண்டு என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை பெருகி வரும் நாட்டு கோழி பண்ணைகள் மூலமும் நாட்டு கோழிகளின் விலை அதிகரிப்பின் மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம் ( பிராய்லர் கோழிகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்த உண்மைகள் ,அதன் மிக பெரிய வியாபார சந்தை கருதி மூடி மறைக்கப்பட்டு வருவது வேறு விஷயம்.)

    பண்ணை அமைப்பு முறை
    -----------------------------------------------

    நாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை மழை,காற்று,அதிக வெயில் போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் உள்ளவை எனவே திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக வளர்க்கலாம்,இதற்கு "டயமன்ட் கிரில்" என்ற மிக சிறியஓட்டைகள் உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க முடியும். நாட்டு கோழி தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால், வேலியின் கிழே முழுவது வலை அடித்து விடுவதன் மூலம் பாம்புகளை நாம் தடுக்க முடியும்.பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2000 கோழிகள் வரை எளிதாக வளர்க்க முடியும், இதற்கு கொட்டகை என்று பெரிதாக ஒன்றும் தேவை இல்லை,மழை,வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய செலவிலான கூரை போன்ற கொட்டகை போதுமானது.

    கோழி தீவனம்
    ------------------------------
    கோழிகளுக்கு உணவாக பச்சை கீரைவகைகள், அசோலா,கினியா புல்,கோ-4,குதிரை மசால் ,காய்கள் மற்றும் அரிசி போன்றவகைகள் கொடுக்கலாம்.பிறகு இது இயற்கையாக சுற்றி திரிவதால் ,காட்டில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.

    நோய் தடுப்பு
    -----------------------
    தினமும் அனைத்து கோழிகளையும் நன்றாக கவனிக்க வேண்டும்.ஏதாவது ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும் எனவே ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் உடனடியாக கண்டு பிடித்து மருந்து கொடுத்து விடுவது அவசியம்.

    விற்பனை
    -------------------
    குஞ்சுகள் வளர்ந்த 3 மற்றும் 4 மாதங்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம்,இயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள்.மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்காமல் பக்கத்துக்கு நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் .

    ReplyDelete