நீதி பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. புத்தி நுட்பமானது, வம்ச பாரம்பரிய குணமா அல்லது சுற்றாடல் சூழ்நிலையும், பல தரப்பட்ட கற்பிக்கும் கலையும் புத்தி நுட்பத்தில் தம் பங்களிப்பைச் செய்கின்றனவா எனும் கேள்வி, பண்டைய மக்கள் மத்தியில் இருந்தது போல் விஞ்ஞானிகள் உலகிலும் நிலவியிருந்தது. அதிகமான சமூகங்களால் புத்தி நுட்பமானது மரபணுக் கடத்தல் மூலம் பரம்பரை பரம்பரையாகப் பரிமாறப்பட்டு வருவதாக இன்னும் எண்ணப்பட்டு வருகிறது. பல ஆண்டு கால ஆய்வுகளின் பிரகாரம், புத்தி நுட்பம் பாரம்பரிய குணமெனவும், அதே சமயம் மற்றைய சகல கூட்டுக் காரணிகளும் அதற்கான பாதையை முழுமையாக ஏற்படுத்தித் தருவதாகவும் கண்டு கொள்ளப்பட்டுள்ளது.

    காடுகளில் போர்தொடுத்து எதையும் ஆக்கிரமிக்கும் குணத்தோடு அலைந்து திரிந்த ஷிம்பன்சி (Chimpanzee) இனக் குரங்குகளுக்கு, ஒரு சில ஆண்டுகள் தரப்பட்ட பலதரப்பட்ட பயிற்சி முறைகளும், கல்வித் திட்டங்களும் அவற்றை மிகவும் புத்தி நுட்பமுள்ள, அமைதியான இனமாக மாற்றியுள்ளது. ஷிம்பன்சி இனக் குரங்குகளினதும் மனித இனங்களினதும், மரபணு 99.8 வீதம் ஒத்திருப்பது ஏற்கனவே கண்டு கொள்ளப்பட்ட அறிவியல் விடயமாகும். பயிற்சிக்கப்பட்ட சிம்பன்சி இனக் குரங்குக் குட்டிகளின் புத்தி நுட்பம் இயல்பாகவே அதிகமாகக் காணப்படுவதும் தெரியவந்துள்ளது.

    மனித இனங்கள் மத்தியில் நடாத்தப்பட்ட ஆய்வுகளும், இரு தரப்பு நியாயங்களையும் நிரூபிக்கும் வண்ணமே அமைந்திருந்தது. புத்தி நுட்பமானது பாரம்பரிய குணங்களில் ஒன்று மட்டுமல்லாது, பழக்க வழக்கம், உணவுப்பழக்கம், கல்விமுறை, பயிற்சிமுறைகள் என்பனவற்றால் வளர்ச்சி பெறுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

    பழைய சிந்தனைகளைக் களையாத உலகில் நவீன கலைகளைப் புரிய முடியாது!! எதுவும் விதியெனும் சித்தாந்தம் சிதையாத நிலையில் போரின்றி இவ்வுலகம் விடியாது!! விதியென்பது அறிவு, முறைமை எனும் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாத நெஞ்சம் புதிய உலகைப் படியாது!! வானை நோக்கி வரம் வேண்டிக் கரம் நீட்டும் நிலையிலும், தியானக்கலையிலும் உள்ள விஞ்ஞானத் தந்திரம் தெளிவாய்ப்புரியின், வானில் இல்லாத ஒன்றிற்கு மண்ணில் மானிடம் மடியாது.!!!

    ReplyDelete