எருமை பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. எருமையானது கன்ற ஈன்றவுடன் பால் கறக்க ஆரம்பிக்கிறது. முதல் ஓரிரு வாரங்களில் கறக்கும் பாலிலிருந்து அந்த எருமையின் பாலின் தன்மையை அறிந்து கொள்ளலாம். 5-6 வாரங்களில் அதிக அளவு பால் தரும். இந்த அளவு சில வாரங்களில் வரை தொடர்ந்து பின் குறைய ஆரம்பிக்கும். பின்பு கறவையின் பால் வற்ற ஆரம்பித்துவிடும்.

    எருமைகள் நான்காவது கன்று ஈனும் போது அதன் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். பின்பு குறைந்து விடும். பால் கறக்கும் கால அளவு தீவனம், பராமரிப்பு, பால் கறக்கும் இடைவெளி, நோய்த்தாக்கம் போன்ற காரணிகளைப் பொறுத்தது. பல்வேறு இன எருமைகளின் பால் உற்பத்திக் காலம் அட்டவணை 10ல் கொடுக்கப்பட்டுள்ளது. முர்ரா இன எருமைகளில் பால் உற்பத்திக் காலம் 262-295 நாட்கள் வரை ஆகும்.

    buffalo_milking
    எருமையில் பால் கறத்தல்

    பால் உற்பத்தியானது மரபியல் மற்றும் இதர பிற காரணிகளைச் சார்ந்துள்ளது. மரபியல் காரணிகளான இனங்கள், இனப்பொருக்கத் திறன், சினையாகும் திறன், அடுத்தடுத்த கன்று ஈனும் இடைவெளி போன்றவற்றைச் சாாந்து வேறுபடுகிறது. மேலும் இவை தவிர பராமரிப்பு, தீவனத்தின் தரம், அளவு, வளர்ப்பாளரின் சூட்டைக் கண்டு சினைப்படுத்தும் திறன் போன்றவற்றவைப் பொறுத்தும் பால் உற்பத்தி அளவும், காலமும் வேறுபடுகிறது.

    தேவையான அளவு ஆற்றல், புரதம், தாதுக்கள், நீர் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ள தீவனம் முறையாக அளிக்கப்படவேண்டும். அதே போல் எருமைகளில் எந்த அளவு கன்று ஈனும் இடைவெளி உள்ளதோ, அந்த அளவு பால் கறக்கும் காலமும், அளவும் அதிகமாக இருக்கும். எனினும் மொத்தம் ஈனும் கன்றுகளின் அளவு குறைவாக இருக்கும்.

    பால் கறக்கும் இடைவெளி பால் அளவு மற்றும் தன்மையைப் பாதிக்கும். முர்ரா இன எருமைகளில் நாளொன்றுக்கு இரு முறை பால் கறப்பதை விட 3 முறை கறக்கும் போது பாலின் அளவு 31 சதவிகிதமும், பால் கொழுப்புச் சத்தின் அளவு 26 சதவிகிதமும் அதிகமாக கிடைக்கிறது.

    ReplyDelete
  2. பால் வற்றிய காலம்

    எருமைகளில் 2-3 மாதங்கள் அடுத்த கன்று ஈனும் முன்பு பால் வற்றிவிடும். அந்த இடைவெளியில் மடிக்கு ஓய்வு கொடுத்து புண்பட்ட செல் மற்றும் திசுக்களை புதுப்பித்துக் கொள்ளும்.

    அதிக பால் உற்பத்தி கொண்ட எருமை மந்தைகளில் (நாளொன்றுக்கு 10 கி.கி அதிகமாக) அடுத்த கன்று ஈனுவதற்கு 3 மாதங்கள் முன்பே பால் அளவு நாளொன்றுக்கு 2.5 கி.கி குறைந்து பின்பு வற்றிவிடும். இது போன்று வற்றும் கறவையில் புதிதாக பிறந்த சில கன்றுகளை ஊட்டச் செய்யலாம். ஒரு எருமையில் பிறந்து சில வாரங்களான 1 அல்லது 2 கன்றுகளை ஊட்டச்செய்யலாம்.

    ReplyDelete
  3. பாலின் தன்மை பால் பீய்ச்சும் முன்போ, அல்லது எருமையின் மடியிலேயே மாறலாம். பாலானது பீய்ச்சும் போதே தன்மை மாறி இருந்தால், அது ஏதேனும் நோய்த்தாக்கம் அல்லது நோயைக் குணப்படுத்த அளித்த மருந்தின் ஒவ்வாமையாக இருக்கலாம். சில சமயங்களில் சூழ்நிலை மாற்றம், தீவன மாற்றம் கூட பாலின் தன்மை மாறக் காரணமாக இருக்கலாம்.

    தீவனத்தின் தன்மை

    உலர்தீவனங்கள் பால் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். அதே வேளையில் அடர் தீவனங்கள் அதிகமாகக் கொடுத்தால் புரப்பியோனிக் அமிலம் உண்டாகி பாலின் கொழுப்பு அளவைக் குறைக்கும். அதிக நார்ச்சத்துள்ள உலர் தீவனங்களில் அசிட்டிக் அமிலம் சுரப்பதால் தான் பாலின் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது.
    அதிக ஆற்றல் உள்ள தீவனங்கள் பாலின் உறையும் (கெட்டி) தன்மையை அதிகரிக்கிறது.

    கடுகு எண்ணெய் மற்றும் அக்குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களை கால்நடைகளுக்கு அளிக்கும் போது அதில் உள்ள குளுக்கோஸினேட்ஸ் (Glucosinolates) கால்நடைகளின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளால்

    ஹைட்ரோலஸ் (Hydrolize) செய்யப்பட்டு தையோசையனேட், ஐசோ தையோசையனேட் போன்ற பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இப்பொருட்கள் வயிற்றில் அதிகமாகும் போது அதன் பாலை அருந்தும் மனிதர்களுக்கு தைராய்டு வீங்குதல் போன்ற விளைவுகள் ஏற்படுகிறது. எனவே கடுகுத் தாவரங்களையோ அல்லது புண்ணாக்கையோ அதிக அளவில் கால்நடைகளுக்குக் கொடுக்கக்கூடாது.

    நோய்களும் மருந்துகளும்

    கால்நடை நோய்கள் பால் அளவையும், தன்மையையும் பெரிதும் பாதிக்கின்றன. நோய் எதிர்ப்பொருள் இரசாயனங்கள் கிருமி நாசினிகள் பயன்படுத்தும் போது அவை பாலுடன் கலக்கின்றன. உதாரணமாக டையஸினான் என்ற மருந்தை வெளிப்புற ஒட்டுண்ணிகள் நீக்க பயன்படுத்திய பிறகு 48 மணி நேரம் கழித்து கறந்த பாலில் அம்மருந்தின் இராசயனத் தன்மை கலந்திருந்தது.

    பால் கறத்தல்

    பல நூற்றாண்டுகளாக எருமைகள் பால் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எருமைகளைப் பராமரித்தல் எளிது. மேலும் இதன் பால், மாட்டுப் பாலை விட தரமானது. எருமை மடியின் இயக்கம் மற்றும் உள்ளமைப்பியல் மாடுகளிலிருந்து வேறுபட்டிருப்பதால் பால் கறத்தல் எளிதாகிறது.

    எருமைகளின் காம்பு,மடியின் உள்ளமைப்பு மற்றும் உடற்கூறியல்:

    எருமையின் மடி கால்நடையின் மடியை ஒத்திருந்தாலும் காம்புகள் அளவில் சற்று பெரியவை. நான்கிற்கும் மேற்பட்ட காம்புகள் இருப்பின் கன்று பிறந்த, ஓரிரு வாரங்களுக்குள் நீக்கிவிடவேண்டும். உருளை வடிவக் காம்புகளே பெரும்பாலும் முர்ரா இன மாடுகளில் காணப்படுகின்றன. முன் இரு காம்புகள் 5-8 செ.மீ, 6.4 செ.மீ வரை நீளமும் அதன் சுற்றளவு 2.5-2.6 செ.மீ வரையும் இருக்கும். இதே போன்று பின் இரு காம்புகளும் 6-9 - 7.8 செ.மீ மற்றும் 2.6 - 2.8 செ.மீ அளவு கொண்டுள்ளன.முன்பக்க மடியை விட பின்பக்கமானது சற்று அளவில் பெரியது. பாலும் இதில் அதிக அளவில் இருக்கும். கால்நடை அளவீட்டின் படி 60:40 என்ற அளவில் பின் மடி மற்றும் முன்மடியில் முறையே பால் அளவு இருக்கும். பால் அதிகம் இருப்பதால் பின்பாகத்தைக் கறந்து முடிக்க அதிக நேரம் ஆகும்.

    அதோடு எருமையின் காம்புகளில் பால் வரும் துளையைச் சுற்றியுள்ள தசைகளும், எபிதீலியத் திசுக்களும் சற்று தடிமனானவை. எனவே எருமையில் பால் கறக்க மாட்டை விட சற்று அதிக விசையுடன் அழுத்தவேண்டும். கன்று ஊட்டிய பின்னர் இநத அழுத்தத்தின் அளவு சற்று குறையும்.

    மாடுகளில் அல்வியோலை என்ற தொகுக்கப்பட்ட பாலானது குழாய் போன்ற வெளியேற்றும் அமைப்புகளிலும், மெமரி (Memory) சுரப்பிகள் மற்றும் காம்புகளில் சேகரித்து வைக்கப்படுகிறது. ஆனால் எருமைகளில் அவ்வாறில்லாமல் பீய்ச்சும் போது உள்ளிருந்து வெளித்தள்ளப்படுகிறது. சீனாவின் மஞ்சள் மாடுகள் மற்றும் எருதுகளில் இவ்வாறு பாய்ச்சப்படுகிறது.
    எருமைகளில் குழாய் அமைப்புகளில் சேகரித்து வைக்கப்படாததால் காம்புகள் பால் கறக்கும் தருணத்தில் தளர்ச்சியாகவும், மென்மையாகவும் இருக்கும். ஆனால் மாடுகளில் அப்படி இருப்பதில்லை.

    ReplyDelete
  4. எருமைப்பாலில் உள்ள முக்கிய நுண்ணுட்டச் சத்துக்கள்

    முக்கிய நுண்ணூட்டச் சத்துக்கள்




    சோடியம் 750 317

    பொட்டாசியம் 1390 908

    கால்சியம் 2030 1880

    மெக்னீசியம் 200 91.9

    இரும்பு - 0.325

    பாஸ்பரஸ் 1290 -

    ஜிங்க் - 626

    தாமிரம் - 0.303

    ReplyDelete
  5. எருமை மாடானது நல்ல அதிக கொழுப்புச் சத்துள்ள பால் மட்டுமன்றி இறைச்சி மற்றும் வேளாண் வேலைகளுக்கும் பயன்படுகிறது. எல்லா வளர்ப்பு மிருகங்களிலும் எருமை மாடுகளே அதிக உற்பத்தி தரக்கூடியவை. அதிலும் ஆசிய எருமைகள் அதிகத் திறனுடன் உழைக்கக்கூடியவை. ஆசிய எருமைகள் ஆண்டொன்றுக்கு 45 மில்லியன் டன்கள் உற்பத்தி தருகின்றன. அதில் 30 மி. டன்கள் இந்தியாவிலிருந்து மட்டும் பெறப்படுகிறது. ஆள் திறன் மற்றும் செலவு குறைவு. எனவே தான் எருமை மாடு வளர்ப்பு சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு எருமை மாடு வளர்ப்பு சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு எருமை மாடு இறைச்சிக்கென வளர்க்கப்படும் போது கிடைக்கும் (350 - 450 கி.கி எடை) இறைச்சியானது அதிக இலாபம் தரக்கூடியது.

    எருமை மாட்டு இனங்கள்

    முர்ரா

    தோற்றம்: இது அதிகமாக பஞ்சாப், டெல்லியில் காணப்படுகிறது.

    சிறப்பியல்புகள்

    இந்த இனம் பரவலாக ரோடக், ஹீசார் போன்ற ஹரியானாவின் மேற்குப் பகுதிகளில் காணப்படுகிறது.
    பாலில் 7 சதவிகிதம் கொழுப்புச் சத்து உள்ளது.
    இதன் உடல் நன்கு பெருத்து, கொம்பு வளைந்து தலை கழுத்துப் பகுதிகள் நீண்டும் மடி பெரியதாகவும் காணப்படும்.
    முதல் கன்று ஈனும் வயது 45-50 மாதங்கள் நல்ல பராமரிப்பில் இது 36-40 மாதத்திலேயே கன்று ஈனும் திறனுடையது.
    அடுத்தடுத்த கன்று இடைவெளி 450-500 நாட்கள்
    இது சிறிது குளிர் மிகுந்த கடலோரப் பகுதிகளில் நன்கு வளரும். எனினும் இதன் அதிக உற்பத்திக்காக நாடு முழுவதும் விரும்பி வளர்க்கப்படுகிறது.

    ReplyDelete
  6. சுர்தி:

    தோற்றம்: குஜராத்

    சிறப்புப் பண்புகள்

    கைரா, பரோடா மாவட்டங்களில் (குஜராத்தைச் சேர்ந்தவை) அதிகம் காணப்படுகிறது.
    இதன் உடல் நல்ல அமைப்புடன் சராசரி எடையுள்ளது.
    கழுத்து நீண்டும், கண்கள் நன்கு கவரும் வண்ணம் இருக்கும்.
    கொம்புகள் அரிவாள் போன்று சிறிது நீளமாகவும், தட்டையாகவும் இருக்கும்.
    இவ்வினங்கள் கறுப்பு (அ) காவி கலந்து இருக்கும். இதன் கால் தொடையில் இரண்டு வெள்ளை நிறப்பகுதி காணப்படுவது இதன் சிறப்பம்சம் ஆகும்.
    சராசரி பால் அளவு 1700 கி.கி
    முதல் கன்று ஈனும் வயது 40-50 மாதங்கள். அடுத்தடுத்துள்ள கன்றுகள் 400-500 நாட்கள் இடைவெளியில் கன்று ஈனும். இதன் காளைகள் எளிய வேலைகளுக்கு ஏற்றது.

    ReplyDelete
  7. ஜாப்ரா பாதி

    தோற்றம்

    குஜராத்தின் கத்தைவார் மாவட்டம்
    இதன் சராசரி பால் அளவு 1800-2700 கிகி
    இதன் பாலில் கொழுப்புச் சத்து மிக அதிகமாக இருக்கும்.

    எருமை மாடுத் தெரிவுகள்

    இந்தியாவில் முர்ரா, மஹ்சானா போன்ற பண்ணைக்கு ஏற்ற அதிக பால் தரும் இனங்கள் காணப்படுகின்றன.
    வெண்ணெய், நெய் போன்றவை தயாரிக்க எருமை மாட்டின் பால் அதிகம் பயன்படுகிறது. ஏனெனில் பசுவின் பாலை விட எருமைப் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது.
    எருமை மாடுகள் நீண்ட நாட்கள் கழித்தே கன்ற ஈனும். 16-18 மாத இடைவெளியில் கன்றுகள் ஈனும் எருமைக் காளைகளுக்கு மதிப்பு குறைவே.
    இது அதிக நார்ச்சத்துள்ள பயிர் கழிவுகள தீவனமாக எடுத்துக் கொள்வதால் பராமரிப்புச் செலவு குறைவே.
    எருமைகள் எப்போதும் குளிர்ந்து நிலையில் இருக்கவேண்டும். எனவே அடிக்கடி கழுவுதல், நீரில் உலவ விடுதல் அவசியம்.

    ReplyDelete
  8. எருமையை தாக்கும் நோய்கள்[தொகு]
    கீழ்கண்ட நோய்கள் வீட்டு எருமைகளை அதிகம் தாக்குகின்றன என ஆய்வுகள் கூறுகிறது.[6]

    எருமை அம்மை (Buffalo pox): நோயானது, இந்தியா முழுவதிலும் பரவிக் காணப்படுகிறது. இதன் மூலம் மடி, உள்தொடை, நாசி, வாய் போன்ற இடங்களில் கொப்புளங்கள் தோன்றுகின்றன. நோய் பரவும் முறை, தடுப்பு முறைகள் அனைத்தும் மாடுகளில் இருப்பது போலத்தான், இதற்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காயங்களை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, ஈக்கள் மொய்க்காமல் பாதுகாக்க வேண்டும். பொதுவாக இவை தானாகவே மறைந்து விடும். புண்கள் பெரிதாகாமல், :1000 விகித பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல், மற்றும் போரிக் அமில களிம்பு 1:100 விகித தடவி, அதை சுத்தப்படுத்த வேண்டும்.
    பிளாக் குவார்டர் (Black Quarter): இது கால்நடை, செம்மறி ஆடுகளில் காணப்படும் ஒரு முக்கியமான நோய். தொடர்பினால் பரவாது எனினும் நச்சுத்தன்மை கொண்டது. இந்நோயானது 6 மாதத்திலிருந்து 2 வயது வரை உள்ள எருமைகளை இந்நோய் தாக்குகிறது. மழைக்காலம் ஆரம்பிக்கும் தருணத்தில் தான் இது அதிகமாகப் பரவும். பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் எருமையின் வாய் வழியே உள்ளே சென்று சில காலம் தங்கி, நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. பென்சிலின், டெட்ராசைக்ளின் போன்ற மருந்துகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம்.
    சோன்சு நோய் (Johne’s Disease): சாதாரண சூழ்நிலையில் தொடர்பினால் பரவக்கூடிய இந்நோய் செம்மறி ஆடு, வெள்ளாடு, எருமை போன்ற பல கால்நடைகளைத் தாக்கக்கூடியது. இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் கழிவுகள் தீவனம் போன்றவை மூலம் எளிதில் பரவக்கூடியது. நோய் தாக்கிய பின்பு அறிகுறிகள் வெளிப்பட 12 மாதங்களிலிருந்து சில வருடங்களாகலாம். பெரும்பாலும் 3-6 வயதுடைய எருமைகளை அதிகம் தாக்கும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் அறிகுறிகள் அதிகம் தென்படாது. அதன் கழிவுகளில் நுண்ணுயிரிகள் இருக்கும். இவை மேய்ச்சல் நிலங்களில் 1 வருடம் வரை வாழும் தன்மை கொண்டவை. சூரிய ஒளி, அதிக அமில / காரத்தன்மையில் இது உயிர் வாழ முடியாது. கால்நடைகளில் 2-6 வருட வயதுள்ளவை பால் கறந்த பின்பு, வரும் கழிவுகளில் இந்நோயின் அறிகுறிகளை எளிதில் அறியலாம். கன்று பிறந்த உடன் தடுப்பூசி போடுதல் சிறந்தது. மந்தைகளில், பரவாவண்ணம் தடுக்க, பிற கால்நடைகளுக்குத் தடுப்பூசி அளித்தல் சிறந்தது.

    ReplyDelete
  9. 'எருமை அல்லது நீர் எருமை (ஆங்கிலம்: buffalo) என்ற விலங்கு, பாலூட்டிகளில் ஒன்றாகும். இவற்றிடையே பேரின, சிற்றின வேறுபாடுகள் உண்டு. இருப்பினும், எருமை என்ற சொல் பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் எருமையையே (ஆங்கிலம்:Water buffalo)க் குறிக்கிறது. இந்த எருமையின் தாயகம் இந்தியா என பெரும்பான்மையான பரிணாம மரபியல் ஆய்வுகள் கூறுகின்றன. இவ்விலங்கின் கொழுப்பு நிறைந்த பாலுக்காகவும், உழவுக்கும், போக்குவரவுக்கும் இவ்விலங்கினம், மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க உயிரியல் வகைப்பாடு இல்லை. இருப்பினும் பெரும்பாலோனோர், வலப்பக்கமுள்ள பெட்டியின் குறிப்புகளை ஏற்றுக்கொள்கின்றனர்.

    ReplyDelete