தமிழ் எழுத்துக்கள் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. உயிரெழுத்துக்கள் 12
    மெய்யெழுத்துக்கள் 18
    உயிர்மெய்யெழுத்துக்கள் 216

    உயிரெழுத்துக்கள் + மெய்யெழுத்துக்கள் + உயிர்மெய்யெழுத்துக்கள் = 246

    ReplyDelete
  2. குடும்பம்: பிராமி
    இடம்: தென்னாசியா
    காலம்: கி.பி 8 ஆம் நூற்றாண்டிலிருந்து - தற்காலம் வரை
    தமிழ் எழுத்துக்கள் கிரந்தா எழுத்துக்களில் இருந்து தோன்றியது. கிரந்தா மொழி தென்னாசியாவை சேர்ந்தது. சிறப்பம்சம் என்னவென்றால்: தமிழ் மொழி, தென்-இந்தியாவின் ஆதி மொழிகளில் ஒன்று ஆகும். முதலாம் நூற்றாண்டிற்கு முன்பு தென்னிந்திய மக்கள் கிரந்த எழுத்து முறைகளை பாவித்தார்கள். பிற்காலங்களில் அதிலிருந்து தழுவி தமிழ் எழுத்து உருவாகியது. தமிழ் மொழி திராவிட மொழிகளை சேர்ந்தது.

    கடைசி வரியிலுள்ள ஆறு எழுத்துக்களும் சமஸ்கிருதத்திலிருந்தும் அதனை அண்டிய எழுத்துக்களிலிருந்தும் .
    எடுத்தது. ஒரு சில தமிழ் எழுத்துக்கள் வௌ;வேறு விதமான ஒலி-வடிவங்களையுடையது.
    உதாரணம்:
    க KA, GA ,HA
    ச CHA, SA
    த THA, DA
    ப PA, BA

    ReplyDelete
  3. உயிரெழுத்து: அ, ஆ - இவை வேறோர் எழுத்தின் உதவியில்லாமல் தாமே இயங்குகின்றன. மனித உடலுக்கு உயிர் எத்தனை முக்கியமோ அதுபோலவே இயங்கும் அ, ஆ முதலிய பன்னிரண்டு எழுத்துக்களும் உயிரெழுத்துக்கள் எனப்படும்.
    அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ - உயிர் எழுத்துக்கள் 12
    மெய்யெழுத்து: க், ங் - 'இக்', 'இங்' என உச்சரிக்கப்படும் 'க்' என்னும் எழுத்தை உச்சரிக்க உயிரெழுத்தின் உதவி தேவைப்படுகிறது. நமது மெய் (உடம்பு) இயங்குவதற்கு உயிர் தேவைப்படுவது போல 'க்' முதலிய எழுத்துக்களை உச்சரிக்க உயிர் எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. ஆதலால் 'க்' முதலிய பதினெட்டு எழுத்துக்களும் மெய்யெழுத்துக்கள் என்று சொல்லப்படும்.

    ReplyDelete

  4. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் - மெய்யெழுத்துக்கள் 18.
    உயிர்மெய் எழுத்து: க என்னும் எழுத்தில் 'க்' என்னும் ஒலியும் 'அ' என்னும் ஒலியும் சேர்ந்திருக்கின்றன. அதாவது க(க்+ அ) - 'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் கூடிப் பிறந்த எழுத்தாகிறது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 x 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
    க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ - 12 இவ்வாறு உண்டாகும் உயிர் எழுத்துக்கள் 216.
    ஆய்த எழுத்து: 'ஃ' இங்ஙனம் மூன்று புள்ளி வடிவமாக இருப்பது ஆய்த எழுத்து. இது அஃது இஃது எஃது என்றாற் போலச் சொல்லின் இடையில் வரும்.

    குறில்: அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் குறுகிய ஓசையுடையவை. ஆதலால் இவை குறில் எனப்படும்.
    நெடில்: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்னும் எழுத்துக்களும் நீண்ட ஓசையுடையவை. ஆதலால் இவை நெடில் எனப்படும்.
    வல்லினம்: க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறும் வலிய ஓசையுடையவை, ஆதலால் இவை வல்லினம் எனப்படும்.
    மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறு எழுத்துக்களும் மெலிந்த ஓசையுடையவை, ஆதலால் இவை மெல்லினம் எனப்படும்.
    இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறும் இடைத்தர ஓசையுடையவை, ஆதலால் இவை இடையினம் எனப்படும்.

    ஆ (பசு), வீடு, வண்டு - இங்ஙனம் ஓர் எழுத்துத் தனித்தோ இரண்டு முதலிய எழுத்துக்கள் தொடர்ந்தோ ஒரு பொருளைத் தெரிவிப்பது சொல் எனப்படும்.
    பெயர்ச் சொல்: ஆ, வீடு, வண்டு - இவற்றுள் ஒவ்வொன்றும் ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்லாதலால் பெயர்ச் சொல் எனப்படும்.
    வினைச்சொல்: கண்டான், கண்டு, கண்ட - இவ்வாறு ஒன்றன் வினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
    திணை: உலகத்து உயிர்களுள் விலங்கு, பறவை, நீர்வாழ்வன, ஊர்வன என்றும் உயிர்களைவிட மனிதன் பேராற்றல் படைத்தவனாக இருக்கின்றான். எனவே, மனிதன் மற்ற உயிர்களைவிட மேலானவனாகின்றான். இவ்வாறே நம் கண்ணுக்குத் தெரியாத தேவரும் நரகரும் உயர்ந்தவர் என்று நூல்கள் கூறுகின்றன. ஆகவே மக்கள், தேவர், நரகர் என்னும் முத்திறத்தாரும் ஏனைய உயிர்களை நோக்க உயர் ஒழுக்கம் (உயர்திணை) உடையவர் என்றும் மற்ற உயிர்கள் உயர்வு அல்லாத ஒழுக்கம் (அல் + திணை) உடையன என்றும் நம் முன்னோர் பிரித்துக் கூறினர். இப்பிரிப்பு இன்றளவும் இலக்கணத்தில் கூறப்படுகிறது.
    உயர்திணை: மக்கள், தேவர், நரகர்.
    அஃறிணை: பிற உயிர் உள்ளனவும் இல்லனவும்.

    பால்:
    பால் பிரிவுகள்: ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால் மற்றும் பலவின்பால்.
    உயர்திணை பால்கள்
    ஆண்பால்: கண்ணன், பாண்டியன், பையன்.
    பெண்பால்: கண்ணகி, அரசி, பெண்.
    பலர்பால்: அரசர்கள், மக்கள், பெண்கள்.
    அஃறிணை பால்கள்
    ஒன்றன் பால்: பசு, கிளி, பாம்பு, தவளை, மலை, மரம்.
    பலவின்பால்: பசுக்கள், கிளிகள், பாம்புகள், தவளைகள், மலைகள், மரங்கள்.

    எண்: பொருள்களின் எண்ணிக்கை. ஒன்றைக் குறிப்பது ஒருமை, ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை.
    ஒருமை எண்: கந்தன், கற்பகம், மாடு, நான், நீ, அவன், அவள், அது.
    பன்மை எண்: பெண்கள், பிள்ளைகள், மாடுகள், நாம், நீர், அவர்கள், அவை.

    இடம்:
    தன்மை இடம்: ஒரு வாக்கியத்தில் பேசுபவரைக் குறிப்பது தன்மை இடம்.
    முன்னிலை இடம்: ஒரு வாக்கியத்தில் கேட்பவரைக் குறிப்பது முன்னிலை இடம்.
    படர்க்கை இடம்: ஒரு வாக்கியத்தில் பேசப்படுபவரைக் குறிப்பது படர்க்கை இடம்.

    வேற்றுமை: வேற்றுமை எட்டு வகைப்படும்.
    முதல் வேற்றுமை: இயல்பான பெயர். கண்ணன் வந்தான்.
    இரண்டாம் வேற்றுமை: ஐ - இரண்டாம் வேற்றுமை உருபு. கண்ணனைக் கண்டேன்.
    மூன்றாம் வேற்றுமை: ஆல், ஓடு, உடன் - மூன்றாம் உருபுகள். கண்ணனால் அழைக்கப்பட்டேன். கண்ணனோடு சென்றேன். கண்ணனுடன் வந்தேன்.
    நான்காம் வேற்றுமை: கு - நான்காம் வேற்றுமை உருபு. கண்ணனுக்குத் திருமணம்.
    ஐந்தாம் வேற்றுமை: இல், நின்று, இருந்து - ஐந்தாம் வேற்றுமை உருபுகள். கண்ணனில் கந்தன் பெரியவன். கண்ணன் வீட்டினின்று சென்றான். கண்ணன் மரத்திலிருந்து இறங்கினான்.
    ஆறாம் வேற்றுமை: அது, உடைய - ஆறாம் வேற்றுமை உருபுகள். இது கண்ணனது பை. இவை கண்ணனுடைய பைகள்.
    ஏழாம் வேற்றுமை: இல், இடம், கண் - ஏழாம் வேற்றுமை உருபுகள். பையில் பணம் இருக்கிறது. கண்ணனிடம் கத்தி இருக்கிறது. வீட்டின் கண் விருந்தினர் இருக்கின்றனர்.
    விளி வேற்றுமை: பெயர் கூறி ஒருவனை அழைத்தலே எட்டாம் வேற்றுமை எனப்படும். அழைத்தல் - விளித்தல். இது விளி வேற்றுமை என்றும் சொல்லப்படும்.

    ReplyDelete
  5. தமிழ் எழுத்துக்கள் முப்பதா? ஐம்பத்தொன்றா?



    51 எழுத்துக்கள் 51 தேவதைகள் 51 புலவர்கள்

    சம்ஸ்கிருதத்தில் அ முதல் க்ஷ வரை 51 எழுத்துக்கள் உள்ளன. இதையே தமிழ்ப் புலவர்களும் ஏற்றுக்கொண்டு பாடல்களில் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். திருமூலர், அருணகிரிநாதர், பரஞ்சோதி முனிவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சங்கத் தமிழ் புலவர்கள் 49 பேரும் 49 எழுத்துக்களின் வடிவம் என்ற திருவிளையாடல் புராணக் கதையும் சுவையானது.

    51 எழுத்துக்களை பீஜாக்ஷரங்கள் (வித்து எழுத்துக்கள்) என்பர் அவற்றால் ஏற்படும் மாலை மந்திர மாலை அல்லது மாத்ருகா புஷ்ப மாலை எனப்படும். 51 எழுத்துக்களுக்கும் தனித் தனி தேவதைகள் உண்டு.



    விராலிமலையில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில்:

    “ ஐந்து பூதமும் ஆறு சமயமும்

    மந்த்ர வேத புராண கலைகளும்

    ஐம்பத்தோர்விதமான லிபிகளும் வெகுரூப ”

    என்றும் இன்னுமோர் இடத்தில்

    “ அகர முதலென உரை செய் ஐம்பதொரக்ஷரமும்

    அகில கலைகளும் வெகுவிதங் கொண்ட தத்துவமும்

    அபரிமித சுருதியும் அடங்கும் தனிப் பொருளை ”



    என்றும் பாடுகிறார். இந்தப் பாடல்களுக்கு திரு. கோபாலசுந்தரம் எழுதிய உரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பில் மிகவும் தெளிவாக 51 சம்ஸ்கிருத எழுத்துகள் என்றே விளக்குகிறார். ஆக சம்ஸ்கிருத 51 எழுத்துக்களையே தமிழ்ப் புலவர்கள் 51 என்று குறிப்பிடுதல் தெளிவு. ஏனெனில் தமிழில் எக்காலத்திலும் 51 எழுத்துகள் இருந்ததற்கு பழந்தமிழ் நூல்களில் ஆதாரம் இல்லை.

    கந்தர் அநுபூதியை 51 பாக்களில் அருணகிரி அமைத்தமைக்கும் மாணிக்கவாசகரின் திருவாசகம் 51 பாடல்களில் அமைந்தமைக்கும் இந்த மந்திர எழுத்துக்களே காரணம் என்றும் பெரியோர் கூறுவர்.

    ReplyDelete
  6. திருமந்திரம்

    திருமந்திரத்தில் 51 எழுத்துக்கள் என்பதை திருமூலர் பல பாடல்களில் பாடுகிறார். இவைகளுக்கு உரை எழுதியோர் தொல்காப்பிய காலத்துக்கு முன் தமிழிலும் 51 எழுத்துக்கள் இருந்ததாக எழுதியுள்ளனர். பின்னர் அது 33 ஆகவும் முப்பதாகவும் குறைக்கப்பட்டதாகச் சொல்லுகின்றனர். (பக்கம் 366, பாடல் 878க்கு திரு ப ராமநாத பிள்ளை எழுதிய உரையில் இவ்வாறு கூறுகிறார்.) ஆனால் இதற்கு ஆதாரம் எதையும் அவர் காட்டவில்லை. ஆதாரம் இருப்பதாகவும் தெரியவில்லை.

    “ இணையார் திருவடி எட்டெழுத்தாகும்

    இணையார் கழலிணை யீரைந்தாகும்

    இணையார் கழலிணை ஐம்பதொன்றாகும்

    இணையார் கழலிணை ஏழாயிரமே” (878)

    ( பாடல் 925,942,944,904, 1195, 1200, 1209, 1726,2650, 2826 ஆகியவற்றிலும் இதை திருமூலர் வலியுறுத்துகிறார்.)

    12 உயிர் ,18 மெய், ஒரு ஆயுதம் உட்பட 31 தமிழ் எழுத்துகளே இன்று வரிவடிவத்தில் இருக்கின்றன. இத்தோடு உயிர்மெய் எழுத்துக்கள் 216 ஐயும் சேர்த்து 247 எழுத்துகள என்று சொல்லுவது வழக்கம்.



    திருவிளையாடல் புராணம்

    பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் சங்கப் பலகை தந்த படலத்தில் ,” ஓ வாணியே, உன் சொரூபமான ஐம்பத்தோரெழுத்தில் அகர முதலாக நாற்பத்தெட்டு எழுத்துகளும் நாற்பத்தெட்டு புலவர்களாக உலகத்தில் பிறக்ககடவன. திருவாலவாயானும் ஒரு புலவராகத் தோன்றி 49ஆவது புலவராக சங்கத்தில் அமரட்டும் என்று பிரம்ம தேவன் கூறியதாக உள்ளது.

    ReplyDelete