மனிதர்கள் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. மனித உடல் அமைப்பு
    பஞ்சபூதமும் உடம்பும்
    உடம்பைப் பஞ்சபூதங்கள் ஆட்சி செய்கின்றன. அவற்றின் அளவு சிறிது மாறினாலும் உயிர்க்குக் கேடு வந்து நேரும் என்கிறது சித்த மருத்துவம்.
    உடல் பஞ்ச பூத மயமானது
    மண் - எலும்பு தசை தோல் நரம்பு மயிர்
    நீர் - மூளை சிறுநீர் கொழுப்பு வெண்ணீர் குருதி
    தீ - புணர்ச்சி சோம்பல் தூக்கம் ஆணவம் பயம்
    வளி - கிடத்தல் இருத்தல் நடத்தல் ஓடல் தாண்டல்
    விண் - மாச்சரியம் மதம் மோகம் உலோபம் காமம்
    என, பூதங்களின் ஆட்சி நடைபெறுகின்றன.

    ஆறு சுவையும் ஐம்பூதமும்.
    இனிப்பு = மண் + நீர்
    புளிப்பு = மண் + தீ
    உவர்ப்பு = நீர் + தீ
    கைப்பு = காற்று + விண்
    கார்ப்பு = தீ + காற்று
    துவர்ப்பு = மண் + காற்று

    உறுப்புகளில் கோள்கள்
    அண்டத்திலுள்ள கோள்களின், ஆற்றலுக்கும், மனித உடலிலுள்ள உறுப்புகளின் ஆற்றலுக்கும் தொடர்பு இருக்கின்றன. அவை,
    தமரகம் - ஞாயிற்று ஆற்றல்
    மூளை - திங்கள் ஆற்றல்
    பித்தப்பை - செவ்வாய் ஆற்றல்
    நுரையீரல் - அறிவன் ஆற்றல்
    கல்லிரல் - வியாழன் ஆற்றல்
    நீர்க்குண்டிக்காய் - வெள்ளி ஆற்றல்
    மண்ணீரல் - காரி ஆற்றல்
    என்று சித்த மருத்துவம் கணித்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. உறுப்புகளில் விண்மீன்கள்.
      விண்மீன்களும் மனித உடலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆதலினால், உடல் உறுப்புகளில் உண்டாகும் நோய்க் குற்றங்களுக்கும் விண்மீன்களுக்கும் தொடர்பு உள்ளன என்பது தெரிகிறது. அவற்றின் விபரம் வருமாறு; -
      அசுவணி : புறங்கால்
      பரணி : உள்ளங்கால்
      கிருத்திகை : தலை
      உரோகிணி : நெற்றி
      மிருகசிரம் : புருவம்
      திருவாதிரை : கண்
      புனர்பூசம் : மூக்கு
      பூசம் : முகம்
      ஆயில்யம் : காது
      மகம் : உதடு மேவாய்
      பூ ர ம் : வலது கை
      உத்திரம் : இடது கை
      அஸ்தம் : கை விரல்
      சித்திரை : கழுத்து
      சுவாதி : மார்பு
      விசாகம் : மூளை
      அனுசம் : வயிறு
      கேட்டை : வலப் பக்கம்
      மூலம் : இடப் பக்கம்
      பூராடம் : முதுகு
      உத்திராடம் : இடை
      திருவோணம் : குய்யம்
      அவிட்டம் : குதம்
      சதையம் : வலது தொடை
      பூரட்டாதி : இடது தொடை
      உத்திரட்டாதி : முழங்கால்
      இரேவதி : கணைக்கால்
      மனிதனின் உடலில் இருபத்தேழு விண்மீன்களும் தங்களின் இயக்கத்தைச் செலுத்தி வருகின்றன. மனிதன் பிறக்கும் போது விண்மீன் மண்டலத்தில் சந்திரனின் இடம் எந்த விண்மீனில் இருக்கிறதோ அதுவே அம்மனிதன் பிறந்த விண்மீனாகக் கொள்ளப்படுகிறது. அந்த விண்மீன், அவனின் உடல் உறுப்புகளில் எந்த உறுப்பின் ஆதிக்கத்தில் உள்ளதோ அந்த உறுப்பே அம்மனிதனின் உயிர் உறையும் இடமாக இருக்கும் என்பது விதி.

      கோள்களும் நோய்களும்
      ஞாயிறு : வலக்கண் நோய், இதய நோய், மூல நோய், வயிற்றுக் கடுப்பு.
      சந்திரன் : இடக்கண் நோய், ஐயநோய், மலேரியா, மன நோய், கழிச்சல்.
      செவ்வாய் : தீக்காயம், நஞ்சு அபாயம், வெட்டைச் சூடு, இரத்த வாந்தி.
      அறிவன் : கழுத்து வலி, வெண்குட்டம், மூளைக் காய்ச்சல், காது வலி,
      ஒற்றைத் தலைவலி.
      வியாழன் : வாயுக் கோளாறு, உடல் பருமன், மூச்சடைப்பு, புற்று நோய்,
      தலை வழுக்கை
      வெள்ளி : நீர்த்தாரை,பிறப்புறுப்புக் குறைபாடு, எய்ட்ஸ், தேமல்,
      வெள்ளைப் படுதல், வீரியக் குறைவு,
      காரி : வயிற்று வலி, சளித் தொல்லை, மூட்டுவலி, யானைக்கால், பக்க
      வாதம், வலிப்பு நோய்,நீரிழிவு.
      இராகு : புற்று நோய், இரைப்பு, விஷக்கடி.
      கேது : அஜீரணம், மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பச் சிதைவு, இரைப்பு.

      அண்டத்தில் இயங்கும் ஆற்றலுக்கும் உடலுக்கும் தொடர்பு இருப்பதால் அண்டம் வேறு, பிண்டம் வேறு என்னும் பாகுபாடு இயற்கை நியதியில் இல்லை. என்பதை,
      " அண்டத்தி லுள்ளதே பிண்டம்
      பிண்டத்தி லுள்ளதே அண்டம்
      அண்டமும் பிண்டமும் ஒன்றே
      அறிந்துதான் பார்க்கும் போதே''
      என்று, சட்டமுனிஞானம் உரைக்கிறது.

      Delete