அழகு பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. நவீனயுகத்தின் மனிதன் தனது பொருளாதார நிலையை வைத்தே தனது அடையாளத்தை முடிவு செய்பவனாகயிருக்கிறான், இன்றைய வணிகக் கலாச்சாரம் மனிதனைச் சூறாவளிக்குள் சிக்கிக் கொண்ட நெருக்கடியான மனநிலைக்கு தள்ளியிருக்கிறது, தனக்கு என்ன தேவை, எதற்காகத் தேவை, ஏன் எல்லா மதிப்பீடுகளையும் பொருளாதாரம் சார்ந்தே தீர்மானிக்கிறோம் என்பதில் இன்று பலருக்கும் குழப்பமான மனநிலையே நிலவுகிறது

    பொருளாதாரத்தின் ஆதாரவளங்களை பற்றியும் சந்தை கலாச்சாரம் சார்ந்து உருவான சீர்கேடுகளையும் பற்றியும், பௌத்தப் பொருளாதாரக் கோட்பாட்டினை முன்வைத்து எழுதப்பட்ட மிகச்சிறந்த புத்தகமிது,

    ஷுமாஸர் ஜெர்மனியில் பிறந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதரம் படித்தவர், நியூயார்க் பல்கலைகழகத்தில் பேராசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றினார், பின்பு பிரிட்டீஷ் தேசிய நிலக்கரிக் கழகத்தின் பொருளாதார ஆலோசகராகவும், பிரிட்டனின் மிகப்பெரிய இயற்கை வேளாண்மை அமைப்பான சாயில் அசோஷியேசன் அமைப்பின் தலைவராகவும், ஸ்காட் பேடர் நிறுவனத்தின் இயக்குனராகவும் பணியாற்றியவர்

    1973ம் ஆண்டு சிறியதே அழகு புத்தகத்தை ஷுமாஸர் வெளியிட்ட போது அது கவனம் பெறவில்லை, ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் இப்புத்தகம் மாற்றுப்பொருளாதாரச் சிந்தனையாளர்களுக்கு பைபிள் போன்றாகியது, பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்நூல் மிக எளிமையாக, பொருளாதாரச் சீர்கேட்டின் ஆதாரக் காரணிகளைக் கண்டறிந்து அதற்கான மாற்றை முன்வைக்கிறது

    அணுஆயுதத்தை எரிபொருளாகப் பயன்படுத்தலாமா, கூடாதா என்ற சர்சை மேலோங்கி வரும் இன்றைய சூழலில் சிறியதன் அழகு மிகத் தேவையான நூலாக உள்ளது,

    நான்கு பகுதிகளாக உள்ள இப் புத்தகத்தின் மையக்கருத்து, மனிதன் தன்னை மேம்படுத்திக் கொள்ள நினைத்து எவ்வாறு இயற்கையைச் சீரழிக்கிறான், அவனது பேராசைகள் எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது, இதிலிருந்து விடுபட காந்தியப் பொருளாதார வழி எவ்வாறு உதவி செய்கிறது, பௌத்த பொருளாதாரச் சிந்தனைகளை ஏன் நாம் கைக்கொள்ளக்கூடாது என்பதே,

    நம் காலத்தின் முக்கியமான பிரச்சனை எரிபொருள், இதற்காகவே யுத்தமும் ஆக்ரமிப்புகளும், படுகொலைகளும் நடைபெற்று வருகின்றன, இயற்கையின் மூலதனமான எரிபொருள்கள் பன்னாட்டு நிறுவனங்களால் எவ்வாறு உறிஞ்சி எடுக்கபட்டு மிகப்பெரிய வணிகமோசடி நடைபெற்று வருகிறது என்பதை உணர்ச்சிபூர்வமாக விளக்கி அதன் பாதிப்புகளை அடையாளம் காட்டுகிறார் ஷுமாஸர்

    ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்ற புத்தகத்தை வாசித்தவர்களுக்கு எரிபொருளை பெறுவதற்காக அமெரிக்கா எவ்வளவு தந்திரங்களை மேற்கொள்கிறது என்பது துல்லியமாகப் புரியும்,

    எரிபொருள் தேவைக்காக இயற்கை நூற்றாண்டுகாலமாக எவ்வாறு பயன்படுத்தபடுகிறது, அதனால் என்ன பொருளாதார மாறுபாடுகள் உருவாகின்றன, என்பதை விரிவாக ஷுமாஸர் விளக்கிகாட்டுகிறார்

    மனிதனின் பெரும்பான்மை மூலதனங்கள் இயற்கை தந்ததே, அதை இன்றைய நவீன மனிதன் உணர்வதேயில்லை, இயற்கையிடமிருந்து தனக்குத் தேவையானதைப் பிடுங்கி கொண்டு அதை முற்றிலுமாக அழித்தொழிக்கவே முற்படுகிறான், அதன் காரணமாகவே பெரும் இயந்திரங்களால் இயற்கை வளங்கள் அசுரவேகத்தில் உறிஞ்சி எடுக்கபடுகிறது, இதனால் நாட்டின் உற்பத்தி உயரும் என்ற பொய்யான பிம்பத்தை காட்டி இம்மோசடியை மறைத்துக் கொண்டு வருகிறார்கள்,

    எரிபொருள் பயன்பாட்டில், ஏழைகளுக்கான சராசரி எரிபொருள் பயன்பாடு, பணக்காரர்களின் பயன்பாட்டில் பதினான்கில் ஒரு பங்கு மட்டுமே, உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலே அடித்தட்டிலும் வறுமையிலும் தான் வசிக்கிறார்கள், ஆகவே இயற்கை வளத்தை சேதமுண்டாக்குவதிலும் சுயலாபங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதிலும் பணக்காரர்களே அதிகப் பங்கு வகிக்கிறார்கள்,

    அவர்களின் நலன்களை மேம்படுத்தவே புதிய பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்படுகிறது, எரிபொருளின் தேவையில் சாமான்ய மனிதன் மிகச் சொற்பமாகவே எதிர்பார்க்கிறான், அது கூட அவனுக்கு முறையாகக் கிடைப்பதில்லை என்பது தான் இன்றைய சூழல்,

    இப்படி பணக்காரர்களின் நலனிற்காக எரிபொருட்கள் அதிகம் உறிஞ்சி எடுக்கபட்டு சந்தைப் பொருளாக பயன்படுத்தபட்டால் சுற்றுசூழல்சீர்கேடு அதிகமாகும், அதனால் அதிகம் பாதிக்கபடப் போவது ஏழை மக்களே, ஆகவே எரிபொருள் விற்பனை சந்தையில் அடிநிலை ஏழைகளே இருவிதத்திலும் பலியாகிறார்கள்.

    ReplyDelete