கட்டுப்பாடு பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அரசியலில் எந்த நிலையில் உள்ளது? என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
    இன்றைய தினம் அவரை நினைவு கூர்வோம், அவரின் எழுத்துக்களை படிப்போம் – அரசியலில் தான் இல்லை என்றாலும் நமது தனிப்பட்ட வாழ்வில் கடமையுடனும், கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் வாழ முயற்சிப்போம்….
    குழந்தைகளுக்கு என்றும் அழியா சொத்தாகிய நல்ல கல்வியையும் / ஒழுக்கங்களையும் சேர்த்து / வழங்க சபதம் எற்போம் .
    பணம் நிரந்தரம் இல்லை என்பதை பங்கு வணிகர்களாகிய நம்மை விட வேறு யாரும் சொல்லி விட முடியாது, இங்கு கோடிகளை ஒரே நாளில் தொலைத்து விடலாம்.. அதே போல் திறமை -யானவர்கள் ஆயிரங்களை கோடிகளாகவும் மாற்ற முடியும்….
    ஆனால் கல்வியும் ஒழுக்கமும் என்று நிரந்தரமானது அதை கற்றவனே நினைத்தாலும் அவனால் அவனது HARD DISK -ன் மெமரியில் இருந்து அழிக்க முடியாது.
    இன்று கல்வி அனைவருக்கும் கிடைக்கிறது, ஆனால் தனிமனித ஒழுக்கம் உள்ளதா? அல்லது போதிக்க படுகிறதா? என்றால் இல்லை என்பது வருத்தமே.
    இன்றைய தினம் நம்மில் அதிகமானோர் பொய் சர்வசாதரணமாக பேசுகிறோம்,அதையே நம்மை அறியாமல் நம் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்கிறோம், எப்படி? என்றால் நம்மை கேட்டு தொலைபேசியில் அழைப்பவரிடம், நாம் வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று சொல்ல சொல்லி குழந்தைகளை பேச சொல்கிறோம்…
    பணம் ஒரு மனிதனுக்கு அந்தஸ்தை தரலாம், காலத்தால் அழியாத அடையாளத்தை நிச்சயம் தராது.
    இன்றும் நாம் அனைவரும் காந்தியையும், கர்ம வீரரையும், கக்கனையும் அண்ணாவையும் நினைவில் வைத்திருக்கிறோம்., அவர்கள் சமக்காலத்தில் வாழ்ந்த செல்வ சீமான்களை பற்றி யாருக்கும் தெரியாது…
    70/- ரூபாய் தினக்கூலி கூட கிடைக்காத ஏழைகள் இன்றும் நம் நாட்டில் பலகோடி மக்கள் வாழ்கிறார்கள். கிடைக்கும் அந்த சொற்பவருமானத்தில் நிம்மதியாக வாழ்கிறார்கள் பல இடங்களில் நாம் பார்க்கலாம் வாரக்கூலி / தினக்கூலி வாங்கும் பலர் ஞாயிற்றுக்கிழமை மீன், மட்டன், சினிமா என்று குதூகலமாக இருக்கிறர்கள்.அவர்களுக்கு கூலி கொடுப்பவர்கள் வாழ்வில் அந்த குதூகலம் இருக்கிறதா? என்றால் இல்லை..
    இத்தனை கோடி மக்கள் அன்றாட தேவைக்கு அல்லல் படும் இந்த சூழலில் நிரந்தரமான சம்பளம் அந்தஸ்துடன் வாழும் அரசியல்வாதிகள் குறிப்பாக அரசு உயர் அதிகாரிகள் இன்று ஊழலில் திரட்டும் வருமானம் அவர்களின் எதிர்கால சந்ததிக்கு தேடி தரும் அவமானம் தான்.
    அண்மையில் ஒரு சுங்க இலாகா அதிகாரியின் வீட்டில் பலகோடி கட்டுக்கட்டாக ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக படித்த பொழுது வலித்தது…. யோசித்து பார்த்தால் அரசின் உயர்ப்பதவி -களுக்கு (IAS / IPS) வரும் பலர் நிச்சயம் செல்வ சீமான் களின் புத்திரர்களாக இருக்க மாட்டார்கள், கிராமத்தையும்/வறுமையையும் பின்ணனியாக அல்லது ஒரு நல்லாசிரியரின் / அரசு கடை நிலை ஊழியரின் வாரிசுகளாக தான் இருப்பார்கள். அவர்களின் தந்தைகள் தங்களது குழந்தைகள் உயர் பதவிக்கு வரவேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் தான் வளர்த்திருப்பார்கள். அப்படி இருக்கையில் இவர்கள் (ஊழல் செய்பவர்கள்) மட்டும் ஏன், தங்களின் பல தலைமுறைகள் எந்த லட்சியமும் இல்லாமல் மைனர் குஞ்சு மணிகளாக வாழவேண்டும் என்று குறுக்கு வழியில் பணம் தேடுகிறார்கள்.
    பல வருடங்களுக்கு முன்பு விகடன் மதன் கேள்வி பதில் பகுதியில் உயர்ந்த மனிதர்கள் உருவாக வறுமை காரணமா? என்ற கேள்விக்கு – பாது காப்பற்ற சூழ்நிலை தான் உயர்ந்த மனிதர்கள் உருவாக காரணம் அதனுள்ளே வறுமையும் அடக்கம் என்றும் சொல்லி இருந்தார் அப்படி சொன்னவர் உலக புகழ் பெற்ற CNN நிறுவனத்தின் Founder Ted Turner அவர்களின் தந்தை .

    ReplyDelete