திருமணம் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. பண்டைத் தமிழரிடையே இருவகைத் திருமண முறை தொடக்கத்தில் வழக்கமாக இருந்ததாகவும், ஒன்று களவுமுறை என்றும், மற்றது கற்பு முறை என்றும், இதற்கு மாறாகத் தொல்காப்பியர் காலத்தில் வடநாட்டார் பின்பற்றி வந்த எட்டுவகைத் திருமண முறைகளைத் தமிழ் மக்கள் அறிந்திருந்தனர் என்றும் வரலாற்றுப் பேராசிரியர் வி.ஆர். ராமச்சந்திர தீட்சிதர் குறிப்பிடுகிறார். (Studies in Tamil Literature and History, Page – 27.)

    களவுத் திருமணம் பலர் அறிய நடப்பதல்ல. ஆணும், பெண்ணும் மனம் ஒத்துக் கலப்பதை அது குறிப்பிடுகிறது. தமிழர்களின் வாழ்வில் மிகப் பழங்காலத்தில் இத்தகைய திருமண முறையே பெருவாரியாக இருந்திருக்க வேண்டும். சமூக வளர்ச்சியில், காலப்போக்கில் பலர் அறியச் சில சடங்குகளைச் செய்து திருமணம் என்பதை நிகழ்த்த வேண்டிய சூழ்நிலை எழுந்தது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

    பலர் அறிய நடந்த திருமணத்தைக் கற்புமுறைத் திருமணம் என்றனர். தொல்காப்பியர் இதனைப் பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்று குறிப்பிடுகிறார். திருமணம் என்பது ஏன் ஏற்பட்டது என்பதற்கானக் காரணத்தைப் பெருமபாலான வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் காணத் தவறிவிட்டனர்.
    தமிழக வரலாற்றில் அந்தக் காரணத்தைக் கண்டு சொன்ன பெருமைக்குரியவர் பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்கார் ஆவார். அவர் கூறுகிறார், நிறுவனமயப்பட்ட (Institution) கற்பு முறைத் திருமணமும் தனிச் சொத்துடைமை வளர்ச்சியும் ஆண்வழிச் சமுதாய வளர்ச்சிக்கு அழைத்துச் சென்றன. (History of Tamils, Page – 10).
    இந்தப் பெருமைக்குரிய கண்டுபிடிப்பு மேலும் வளர்த்தெடுத்துச் செல்லப்படாதது தமிழக வரலாற்று ஆய்வில் நிகழ்ந்த அவலமாகும். பழந்தமிழரின் கற்புமுறைத் திருமணம் நிகழ்ந்த முறையை இனிக் காண்போம்.
    பண்டைத் தமிழரின் பெரும்பாலான திருமணங்கள் இன்றைக்குப் போலவே பெற்றோர்கள் ஏற்பாடு செய்து நடந்தவையே. இவை பெரும்பாலும் மாமன் மகள், அத்தை மகன், அக்கா மகள் ஆகியோரைத் திருமணம் செய்வது அல்லது நெருங்கிய உறவினரிடையே நடந்தன என்கிறார், அமெரிக்கப் பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் (The Poems of Ancient Tamils, Page – 48) இவரது கருத்து, மரபு வழியான தமிழறிஞர்களின் கருத்துக்கு மாறானதாக அமைந்துள்ள போதிலும் உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது எனலாம்.

    ReplyDelete