அறிவியல் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. உலகப் புகழ்பெற்ற தனது மூலதனம் நூலை "உங்க ளுடைய தீவிர அபிமானி" என்று கையெழுத்திட்டு கார்ல் மார்க்ஸ் ஒருவருக்கு அனுப்பி வைத்தார். அந்த நபர் "பரிணாமவியலின் தந்தை" சார்லஸ் டார்வின். டார்வின் எழுதிய "உயிரினங்களின் தோற்றம்" (Origin of Species) என்ற நூலைப் படித்துவிட்டு, வரலாற்றுப் பொருள்முதல் வாதத்துக்கு (Historical Materialism) அந்த நூல் அடிப்படையாக இருந்ததாக மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். டார்வினின் கண்டறிதல் அந்த அளவுக்குத் தாக்கம் செலுத்தியிருந்தது.

    கடவுளே மனித இனத்தைத் தோற்றுவித்ததாக நம்பப்பட்டு வந்த நிலையில், "இல்லை, அனைத்து உயிரினங்களும் இயற்கை நடைமுறையின் ஒரு பகுதியாகப் பரிணாம வளர்ச்சியில் உருவானவை" என்பதை அறிவியல் ஆதாரங்களுடன் டார்வின் நிறுவினார். அதற்காகவே இன்றுவரை தூற்றப்பட்டுவருகிறார். அறிவியல் உலகின் இரண்டாவது புரட்சி என்று டார்வினின் பரிணாமவியல் தத்துவத்தைக் கூறலாம்.

    பூவுலகில் உயிரும் மனித இனமும் எங்கிருந்து வந்தன என்ற அடிப்படைக் கேள்விக்கான விடையை, பரிணாம வளர்ச்சிக் கொள்கை சொல்கிறது. சரி, பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் என்ன?

    பரிணாம வளர்ச்சிக் கொள்கை மிகவும் எளிமையானது, அது வலியுறுத்தும் 3 முக்கிய விஷயங்கள்:

    திடீர் மாற்றம்

    ஓர் உயிரினத்தின் மரபணு (DNA), திடீர் மாற்றம் (Mutation) அடைவதற்கு வாய்ப்பு உண்டு. ஓர் உயிரினத்தின் மரபணுவில் ஏற்படும் இந்த திடீர் மாற்றம், அதனுடைய வாரிசின் மீது தாக்கம் செலுத்துகிறது. உடனடியாகவோ அல்லது பல தலைமுறைகளுக்குப் பிறகோ இந்த தாக்கங்கள் நிகழலாம்.

    ஒரு திடீர் மாற்றம் நல்ல விளைவையும் ஏற்படுத்தலாம், தீமையான விளைவையும் ஏற்படுத்தலாம், எந்தத் தாக்கமும் இல்லாமலும் போகலாம். அந்த மாற்றம் தீமையானதாக இருக்கும்பட்சத்தில், ஓர் உயிரினத்தின் வாரிசு தொடர்ந்து வாழ்வதோ, இனப்பெருக்கம் செய்வதோ சாத்தியமில்லை. அதேநேரம், திடீர் மாற்றம் நல்ல விளைவைத் தரும்பட்சத்தில், மாற்றம் அடைந்த வாரிசு, மற்ற வாரிசுகளைவிடச் சிறந்த ஒன்றாக இருக்கும். அதனால், அதிக இனப்பெருக்கம் செய்யும். இதன்மூலம், அந்த சாதகமான திடீர் மாற்றம் பரவலாகும். தீமை பயக்கும் திடீர் மாற்றங்கள் நீக்கப்பட்டு, நல்ல மாற்றங்கள் பரவலாவதற்குக் காரணம் இயற்கைத் தேர்வு (Natural selection).

    ReplyDelete
  2. kaama ariviyal unakkuth theriyuma?

    ReplyDelete