சனி பெயர்ச்சி பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. சனி பெயர்ச்சியானது இந்த வருடம் திருக்கணிதம் முறைப்படி நவம்பர் 2ம் தேதியும் , வாக்கிய முறைப்படி டிசம்பர் 16ம் தேதியும் நிகழ உள்ளது.
    பொது விதிப்படி சனி பெயர்ச்சியாகும் தேதியில் இருந்து ஆறு மாதம் முன்னரே அதன் பலன்கள் தெரிய ஆரம்பிக்கும்..அதன் படி பார்த்தால் மே 2ம் தேதியே அதன் பலன் தெரிய ஆரம்பித்து இருக்க வேண்டும்..ஆனால் அந்த சமயத்தில் சனி வக்கிரம் அடைந்ததால் வக்கிர நிவர்த்தி ஜூலை 16ல் நிறைவடைவதால் , ஜூலை 16 முதல் சனி பெயர்ச்சியின் பலாபலன்கள் தெரிய ஆரம்பிக்கும்

    சனி பகவானுக்கு துலாம் ராசி உச்ச வீடாகும்..அங்கு அவர் வழக்கமாய் தாங்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு பதிலாக மூன்று ஆண்டுகள் டென்ட் அடித்து தங்கி நீண்ட சுப/அசுப பலன்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் வாரி வழங்கினார்..உச்ச வீட்டில் நீண்ட காலமாய் தங்கி சுப பலன்கள் நடக்கும்போது கருணை உள்ளத்தோடும் அசுப பலன்கள் தரும்போது கடுமையாகவும் நடந்துகொண்டார் சனி பகவான்.

    விருந்தாளி வீட்டிற்கு செல்லும்போது நாம் எப்படி நமது சேட்டைகளை அடக்கி நல்ல பிள்ளையாய் இருப்போமோ அதே போன்று சனியும் விருச்சிகத்துக்கு செல்லும்போது தனது சுயரூபத்தை சற்று குறைத்துகொள்வார்..எனவே நன்மையையும் தீமையும் சரி சமமாய் இருக்கும்..

    ReplyDelete
  2. மேஷம் - சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை அஸ்வினி 4 பாதம் முடிய , பரணி 4 பாதம் முடிய , கிருத்திகை 1 பாதம் முடிய , பலன்கள் மதிப்பு 55%




    சனி பெயர்ச்சி பலன்கள் முழுவதும் சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டது . இது பொது பலன்களே !!!!!!

    சனி பகவான் மேஷ ராசிக்கு பகை பெற்றவர் . ராசிக்கு பாதகதிபதி , மற்றும் 10ம் இடம் , 11ம் இடத்துக்கு உரியவர் .கடந்த இரண்டரை வருடம் மாரக ஸ்தானமான 7ம் இடத்தில் இருந்து பல கஷ்டங்களை கொடுத்தார் . ஆனால் இந்த ஜய வருட சனிபெயர்ச்சி மேஷ ராசிக்கு அஷ்டம சனியாக வருகிறார் . ஆனால் மேஷ ராசியை சேர்ந்தவர்கள் அஷ்டம சனியை பார்த்து பயப்பட தேவையில்லை . ஏன் என்றால் டிசம்பர் 16ந் தேதி சனி பகவான் பெயர்ச்சி ஆகி விருச்சிக ராசிக்கு வருகிறார் . விருச்சிக ராசியில் உள்ள சனி பகவானை கடகத்தில் உள்ள உச்சம் பெற்ற குரு பகவான் பார்வை பெறுகிறார் . இதனால் 6 மாதம் வரை எந்த பிரச்சனை வந்தாலும் பாதிப்பு ஏற்படாது . அதன் பிறகு 1 வருடம் குரு பகவான் ராசிக்கு 5ம் இடத்தில் அமர்ந்து மேஷ ராசிக்கு ஏற்படும் அஷ்டம சனியின் கஷ்டங்களை இல்லாமல் செய்வார் . மேஷ ராசியை சேர்ந்தவர்கள் அஷ்டம சனியின் தாக்கம் 1 வருடம் மட்டும் தான் சிரமமாக இருக்கும் .

    சனி பகவான் டிசம்பர் 16ந்த் தேதி முதல் விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தந்தைக்கு உடல் உபாதை , மருத்துவ செலவு ஏற்படுத்துவார் . தன 3ம் பார்வையாக 10ம் இடத்தை பார்ப்பதால் , தொழிலில் சிரமங்களை கொடுத்தாலும் நஷ்டம் ஏற்படாது .சந்திரனுக்கு 8ம் இடத்தில சனி இருப்பதால் தாயுடன் மன ஸ்தாபம் ஏற்படும் . தொழில் ஸ்தானத்துக்கு பாதகமான இடத்தில சனி இருப்பதால் லாபம் எதிர்பார்க்க முடியாது .

    சனி பகவான் தன சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் சஞ்சரிக்கும் பொழுது சொந்த தொழில் , மற்றும் வேலையில் உள்ளவர்கள் சிரமத்துக்கு ஆளாவார்கள் . சனி பகவான் 7ம் பார்வையாக 2ம் இடத்தை பார்ப்பதால் பணத்தட்டுப்பாடு ஏற்படும் . இதனால் கடன் வாங்க நேரிடும் . 10ம் பார்வையால் 5ம் இடத்தை பார்ப்பதால் , பூர்வீக சொத்துக்களால் பிரச்சனை ஏற்படும் . மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ செலவு ஏற்படும் .

    சனி பகவான் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது , சகோதர உறவு பாதிக்க படும் . மற்றும் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொல்லைகள் கொடுப்பார்கள் . தொண்டை சம்பந்தமான வியாதி வந்து அகலும் .படிப்பில் மாணவர்கள் மந்த நிலையை அடைவார்கள் .

    மேஷ ராசிக்கு இரண்டரை வருடம் அஷ்டம சனியில் 1 வருடம் மட்டும்தான் கஷ்டங்கள் கடுமையாக இருக்கும் . மீதி ஒன்றரை வருடம் குருபகவானின் அருளால் நல்லதே நடக்கும் .


    பரிகாரம்

    அஷ்டம சனி ஆரமித்த நாள் முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து , காகத்துக்கு சாதம் வைத்த பிறகு மதிய உணவு அருந்தவும் .
    கால பைரவருக்கு நல்ல எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும் .

    ReplyDelete
  3. மீனம் - சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . பூரட்டாதி 4 பாதம் , உத்திரட்டாதி 4 பாதம் முடிய , ரேவதி 4 பாதம் முடிய . பலன்கள் மதிப்பு 40 %



    சனி பெயர்ச்சி பலன்கள் முழுவதும் , சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டது . இது பொது பலன்களே !!!!

    சனி பகவான் மீனராசிக்கு 8ம் இடத்திலிருந்து 9ம் இடத்துக்கு செல்கிறார் .
    கடந்த காலம் முழுவதும் அஷ்டம சனியால் ரொம்பவும் பாதிக்கப்பட்டவர்கள் மீன ராசிக்கார்கள் . ஆனால் இந்த சனி பெயர்ச்சி பலன்கள் சிறப்பாக இல்லை என்றாலும் , கடந்த காலம் கஷ்டம் இருக்காது . சனி பகவான் மீன ராசிக்கு 11ம் இடம் , மற்றும் 12ம் இடத்துக்கு உரியவர் . அவர் தற்பொழுது 10ம் இடத்துக்கு 12ல் சஞ்சரிக்கும் பொழுது வேலையில் உள்ளவர்கள் மாறுதல் அடைவார்கள் . சொந்த தொழில் செய்பவர்கள் , அடிகடி நிறைய சிக்கல்களை சந்திக்க நேரிடும் . சனி பகவான் 6 மாத கால வரையில் குரு பகவானின் பார்வையில் இருப்பதால் , எந்த பலன்களையும் கொடுக்க மாட்டார் .

    சனி பகவான் விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களை கொடுப்பார் . குரு பகவானின் பார்வையில் இருப்பதால் .

    சனி பகவான் தன் சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்கள் கொடுப்பார் . ஏனென்றால் 11ம் இடத்து அதிபதி பாக்கிய ஸ்தானத்தில் , சஞ்சரிக்கும் பொழுது நல்ல பணவரவு ஏற்படும் . சுப செலவு ஏற்பட வாய்ப்பு அதிகம் . சனி பகவான் 1 வருட காலம் அனுஷத்தில் இருப்பார் . இந்த காலம் அருமையான காலம் . வெளிநாடு சென்று சம்பாரிக்கலாம் .

    சனி பகவான் மீன ராசிக்கு பாதகதிபதி நட்சத்திரமான கேட்டையில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்கள் நடக்க வாய்ப்பில்லை . பிள்ளைகள் சொல் பேச்சு கேட்க மாட்டார்கள் . தொழில் சிறப்பாக இருக்காது . கூட்டு செய்பவர்கள் பிரிவார்கள் . இந்த காலகட்டங்களில் தெய்வ வழிபாடு அவசியம் .

    மீன ராசிக்காரகள் அஷ்மசனி உச்சத்திலிருந்து விடுதலை . கடந்த காலம் ஏற்பட்ட கஷ்டம் இப்போது ஏற்படாது . இருந்தாலும் சிறு சிறு பிரச்சனைகள் வரும் ஏனென்றால் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12ம் அதிபதி .

    ReplyDelete
  4. மகரம் - சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . உத்திராடம் 2,3,4 பாதம் வரை , திருவோணம் 4 பாதம் முடிய , அவிட்டம் 1,2 , பாதம் மட்டும் , பலன்கள் மதிப்பு 55%



    சனி பெயர்ச்சி பலன்கள் முழுவதும் சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டது . இது பொது பலன்களே !!!!

    மகர ராசிக்கு கடந்த காலம் 1 வருடம் நல்ல பலன்களை கொடுத்திருப்பார் சனி பகவான் . ஏனென்றால் கடந்த காலம் 10ம் இடத்தில் சனி உச்சம் .அனால் அவர் இருந்த நட்சத்திர சாரம் சரியில்லை . அதனால் சனிபகவான் கடந்த காலம் 1 வருடம் மட்டுமே நல்ல பலன்களை கொடுத்திருப்பார் . ஆனால் இந்த சனி பெயர்ச்சி ராசிக்கு 11ம் இடம் . நல்ல இடம் . கேட்டை , மற்றும் அனுஷம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களை வாரி வழங்குவார் . ஆனால் மகர ராசி சர ராசி , சர ராசிக்கு 11ம் இடம் பாதகமான இடம் . அதனால் திடீர் சரிவையும் கொடுக்கும் .
    சனி பகவான் விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலம் . விரய காலம் மேலும் குரு பெயர்ச்சி ஆனால் தான் மகர ராசிக்கு நல்ல காலம் . ஏனென்றால் குரு பகவான் 3ம் இடம் மற்றும் 12ம் இடத்துக்கு உரியவர் . குரு பகவானின் 5ம் பார்வை சனிபகவானின் மேல் படுகிறது . இதனால் குடும்பத்தில் , செய்யும் தொழிலில் விரயம் உண்டாகும் . குரு பகவான் பெயர்ச்சி ஆன பிறகு உங்களுக்கு செய்யும் தொழிலில் அபரிதமான பணவரவு ஏற்படும் . திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் .


    சனி பகவான் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது தந்தைக்கு உடல் நல கோளாறு கொடுக்கும் . மேலும் இந்த ராசிக்கரர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டு மருத்துவ செலவு ஏற்படும் . ராசிக்கு 2ம் இடத்து அதிபதி சனி பகவான் , ராசிக்கு 9ம் இடத்து அதிபதி நட்ச்சதிரத்தில் . 11ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும் . இந்த காலகட்டத்தில் பண வரவு தாரளமாக வரும் .

    சனி பகவான் தன் சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் சஞ்சரிக்கும் பொழுது , இரும்பு , கெமிகல்ஸ் , பிளாஸ்டிக் , தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் . [ பிறப்பு ஜாதகத்தில் 2ம் இடத்து அதிபதி 11ம் இடத்தில் இருந்து , கோச்சாரத்தில் அதே கிரகம் அந்த இடத்துக்கு வந்தால் அபரிதமான பண வளர்ச்சி ஏற்படும் ]

    மகர ராசிக்கு 11ம் இடம் பாதகமான இடம் . சில சமயங்களில் திடீர் சரிவு ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் . 4ம் இடத்துக்கு 8ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் , வண்டி வாகனங்களில் முதலிடு செய்வதை தவிர்க்கவும் . மேலும் வீடு வாங்கி விற்பனை செய்பவர்கள் நஷ்டம் அடைய வாய்ப்பு உண்டு . தாய்க்கு உடல்நிலை பாதிக்கும் .மருத்துவ செலவு ஏற்படும் . மனைவி வேலையில் இருந்தால் , அலுவலகத்தில் பிரச்சனை ஏற்படும் .அதனால் வேலையை விடும் நிலை ஏற்படும் .

    ReplyDelete
  5. தனுசு - சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . மூலம் 4 பாதம் முடிய , பூராடம் 4 பாதம் முடிய , உத்திராடம் 1ம் பாதம் மட்டும் . பலன்கள் மதிப்பு 40%



    சனி பெயர்ச்சி பலன்கள் முழுவதும் சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டது ! இது பொது பலன்களே !!

    தனுசு ராசிக்கு சனி பகவான் 2ம் இடம் மற்றும் 3ம் இடத்துக்கு உரியவர் . சனி பகவானே தனுசு ராசிக்கு , வருமானத்தை குறிக்கும் கிரங்களில் சனி பகவானும் ஒருவர் . அவர் கடந்த காலம் முழுவதும் லாப ஸ்தானம் என்று சொல்லகூடிய 11ம் இடத்தில் இருந்து நல்ல பலன்களை கொடுத்துவந்தார் .
    [ பிறப்பு ஜாதகத்தில் சனி பகவான் , கேந்திரமோ , உபஜய ஸ்தானத்தில் இருந்தால் , கோச்சாரத்தில் கடந்த காலம் நல்ல பலன்கள் கொடுத்திருப்பார் .சனி பகவான் 11ல் உச்சம் அதனால் ] அனால் தற்பொழுது ராசிக்கு 12ம் இடத்தில் ஏழரை சனி ஆரம்பம் . இந்த ஏழரை சனி காலத்தில் , உண்மையை உணர்த்தும் காலம் . நண்பர்கள் , மற்றும் உறவினர்கள் , உங்களால் உதவி பெற்றவர்கள் , இவர்களை பற்றி இந்த ஏழரை ஆண்டுக்குள் நீங்கள் தெரிந்துகொள்ளலாம் . 2ம் அதிபதி 12ம் இடத்தில், வருமானம் வந்தாலும் செலவு கட்டுக்குள் அடங்காமல் செலவு ஆகும் .

    சனி பகவான் விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது , வண்டி வாகனங்களால் செலவு ஏற்படும் . மற்றும் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்துக்கு செல்ல வாய்ப்பு உண்டாகும் . ராசிக்கு 5ம் இடத்துக்கு 8ம் இடத்தில் சனி பகவான் இதனால் குழந்தைகளுக்கு மருத்துவ செலவு உண்டு .

    சனி பகவான் தன் சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் சஞ்சரிக்கும் பொழு குடுபத்தில் விரய செலவு , மற்றும் பணம் பற்றக்குறை ஏற்படும் . குடும்பத்தில் அமைதி ஏற்படாது . சண்டை , சச்சரவு , ஏற்படும் . இந்த கால கட்டங்களில் கடவுள் வழிபாடு , தியானம் . மிகவும் அவசியம் .

    சனி பகவான் உங்கள் ராசிக்கு 1ம் இடம் , மற்றும் 10ம் இடம் அதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது , சொந்த தொழில் செய்பவர்கள் , நஷ்டம் அடைவார்கள் , மேலும் கடன் ஏற்படும் . வேலையிலுள்ளவர்கள் அலை கழிக்க படுவார்கள் . ஏனென்றால் உங்கள் ராசிக்கு புதன் பாதகாதிபதி . பாதகாதிபதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் எந்த கிரகம் ஆனாலும் பாதகம் தான் செய்யும் .

    சனி பகவான் பெயர்ச்சி ஆகி 6 மாதம் காலம் எதுவும் செய்யமாட்டார் . ஏனென்றால் , குருபகவானின் 5ம் பார்வை பெறுவதால் , அமைதியாக இருப்பார் . 6 மாதம் கழித்து தன் வேலையை தொடங்குவார் .

    ReplyDelete
  6. விருச்சிகம் - சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை. விசாகம் 3ம் பாதம் , அனுஷம் 4 பாதம் முடிய , கேட்டை 4 பாதம் முடிய . பலன்கள் மதிப்பு 25 %


    சனி பெயர்ச்சி பலன்கள் முழுவதும் சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டது . இது பொது பலன்களே !!!


    சனி பகவான் விருச்சிக ராசிக்கு பகை பெற்றவர் . ராசிக்கு 3ம் இடம் மற்றும் 4ம் இடத்துக்கு உரியவர் . விருச்சிக ராசி ஸ்திர ராசி . ஸ்திர ராசிக்கு 3ம் இடம் மற்றும் 8ம் பாதகமான இடம் . 3ம் இடத்துக்கு உரியவர் சனி பகவான் விருச்சிக ராசிக்கு பாதகம்தான் செய்வார் . விருச்சிக ராசிக்கு ஏழரை சனி இரண்டரை வருடம் மட்டும் முடிந்துள்ளது . இன்னும் 5 ஆண்டுகள் மீதி உள்ளது . இப்போது ஜென்ம சனி . இந்த இரண்டரை வருடம் மிகவும் சோதனையான காலம் . இந்த காலகட்டங்களில் தொழில் நஷ்டம் ஏற்படும் . சொந்த தொழில் செய்பவர்கள் தொழிலை மூடும் நிலை ஏற்படும் . கடன்களால் நிம்மதி இருக்காது . கௌரம் , அந்தஸ்துக்கு , சோதனையான காலம் . மனைவிடம் சண்டை , சச்சரவு , ஏற்படும் . மருத்துவ செலவு ஏற்படும் . தாய்க்கு உடல் நிலை பாதிக்கும் .

    சனி பகவான் பெயர்ச்சி ஆகி 6 மாத காலம் எதுவும் செய்ய மாட்டார் . குரு பகவான் 5ம் பார்வை பெற்று இருப்பதால் நல்ல பலன்களை கொடுப்பார் . குரு பெயர்ச்சி ஆன உடன் ,சனி பகவான் ஜென்ம சனி வேலையை தொடங்குவார் .

    சனி பகவான் , குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது ,பணத்தட்டுப்பாடு ஏற்படும் . பிள்ளைகளால் விரய செலவு உண்டாகும் .கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது .

    சனி பகவான் சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் சஞ்சரிக்கும் பொழுது , இடம் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும் . வண்டி வாகனங்களால் விரய செலவு ஏற்படும் . தாய்க்கு உடல் நிலை பாதிக்கும் . இதனால் மருத்துவ செலவு உண்டாகும் .

    சனி பகவான் புதனின் நட்சத்திரமான கேட்டையில் சஞ்சரிக்கும் பொழுது .செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்படும் . இதனால் தொழிலை மூடும் நிலை உண்டாகும் . வேலையில் உள்ளவர்கள் வேலையை விடும் நிலை ஏற்படும் .வம்பு , வழக்கு , நீதிமன்றம் வரை செல்லும் நிலை ஏற்படும் .

    ReplyDelete
  7. துலாம் - சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . சித்திரை 3, 4, பாதம் முடிய , சுவாதி 4 பாதம் வரை , விசாகம் 1,2,3, பாதம் வரை . பலன்கள் மதிப்பு 40%



    சனி பெயர்ச்சி பலன்கள் முழுவதும் சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டது . இது பொது பலன்களே !!!

    சனி பகவான் துலாம் ராசிக்கு யோகக்காரர் ! அவர் 4ம் இடம் , மற்றும் 5ம் இடத்துக்கு உரியவர் . இவர் துலாம் ராசி , லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு நல்லபலன்களை கொடுப்பார் . ஆனால் கடந்த 5வருடமாக நல்ல பலன்கள் கொடுக்கவில்லை , ஏனென்றால் ,ஏழரை சனி நடந்து கொண்டுஇருப்பதால் .தற்போது ஜென்ம சனி விலகும் காலம் , இனி நல்ல காலம் . சனி பகவான் 16.12.2014 அன்று பெயர்ச்சி ஆகி , விருச்சிக ராசிக்கு வருகிறார் . இது ராசிக்கு 2ம் இடம் , இது நல்ல இடமில்லை . இருந்தாலும் கடந்த காலம் நடந்த கஷ்டங்கள் இப்போது நடக்காது .ஏழரை சனியின் 3ம் பாதம் , படிப்படியாக கடன் குறையும் . சுப நிகழ்சிகள் நடக்கும் . வம்பு வழக்கு முடிவுக்கு வரும் . நீதி மன்றத்தில் வழக்கு இருந்தால் அதுவும் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் .

    சனி பகவான் , குரு பகவான் நட்சத்திரமான விசாகம் சஞ்சரிக்கும் பொழுது குடும்பத்தில் பணத்தட்டுப்பாடு வரும் . மனைவிக்கு மருத்துவ செலவு ஏற்படும் . வண்டி வாகனங்களால் விரயம் உண்டாகும் . இந்த காலக்கட்டங்களில் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும் .

    சனி பகவான் தன் சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் சஞ்சரிக்கும் பொழுது , கடன் சுமை குறையும் . பணவரவு ஏற்படும் . இடம் சம்பந்தமான பிரச்சனைகள் முடிவுக்கு வரும் . பிள்ளைகள் வெளிநாடு வேலைக்கு செல்ல வாய்ப்பு வரும் . தாயாரால் பண உதவி கிடைக்கும் . சொந்த தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள் . அலுவலகத்தில் பணி புரிபவர்கள் பதவி உயர்வுடைவார்கள் .

    சனி பகவான் , தன நட்பு கிரகமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது , சுப நிகழ்சிகள் நடக்கும் . தந்தையால் பண உதவி கிடைக்கும் . சொத்துக்களால் லாபம் உண்டாகும் . வம்பு , வழக்கு , முடிவுக்கு வரும் .

    மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி கடந்த காலம் இழந்ததை , சனி பகவான் ஏழரை சனி முடியும் காலம் கொடுத்துவிட்டு செல்வார் . இருந்தாலும் அவ்வபொழுது சின்ன , சின்ன , கஷ்டங்கள் வரும் .ஏனென்றால் ஏழரை சனி முடிய இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன .

    ReplyDelete
  8. கன்னி - சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . உத்திரம் 2,3,4, பாதம் வரை , ஹஸ்தம் 4 பாதம் முடிய , சித்திரை 1,2 , வரை . பலன்கள் மதிப்பு 70%



    சனி பெயர்ச்சி பலன்கள் முழுவதும் சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டது . இது பொதுவான பலன்களே !!!!!

    சனி பகவான் கன்னி ராசிக்கு யோகக்காரர் ! அவர் ராசிக்கு 5ம் இடம் மற்றும் 6ம் இடத்துக்கு உரியவர் .நல்லது 70 % செய்தாலும் , 30% கெட்ட பலனையும் கொடுப்பார் . ஏனென்றால் ராசிக்கு 6ம் இடம் ஆதிபத்தியம் பெற்றதனால் கெட்ட பலனும் கொடுக்க வேண்டும் என்பது விதி . இந்த சனி பெயர்ச்சி ஏழரை சனி விடும் காலம் . இனி கன்னி ராசிக்கு பொற்காலம் .சனி பகவான் ராசிக்கு 3ம் இடத்துக்கு வருகிறார் , இதனால் திருமணம் ஆகாத கன்னி ராசி காரர்களுக்கு திருமணம் வாய்ப்பு கைகூடும் . 3ம் பார்வையால் 5ம் இடத்தை பார்ப்பதால் பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும் .நீதிமன்றத்தில் வழக்கு இருந்தால் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் .

    சனி பகவான் பெயர்ச்சி ஆகி ஒரு மாத காலம் விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார் .இந்த ஒருமாதகாலம் நல்ல பலன்கள் நடக்க வாய்ப்பு இல்லை . ஏனென்றால் கன்னி ராசிக்கு பாதகாதிபதி குரு, அதனால் பாதகாதிபதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் போது மனைவி இடம் கருத்து வேறுபாடு வரும் , சண்டை சச்சரவு ஏற்படும் .

    சனி பகவான் தன சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் சஞ்சரிக்கும்போழுது நல்ல பலன்களை வாரி வழங்குவார் . செய்யும் தொழிலில் மேன்மை அடையும் . கடன் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும் .திருமணம் கைகூடும் .சுப நிகழ்சிகள் நடக்கும் .படிக்கும் மாணவர்களுக்கு வெளி நாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும் .

    சனி பகவான் புதன்னின் நட்சத்திரமான கேட்டையில் சஞ்சரிக்கும் பொழுது , சொந்த தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் அடைவார்கள் . வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் . வெளி நாடு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் .

    மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு , கடந்த ஏழரை வருடதில் இழந்ததை மீட்டுவிடலாம் . இருந்தாலும் , அவ்வபோது சிறு தடங்கல் ஏற்படும் . இதனால் நல்ல பலன்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது !

    ReplyDelete
  9. சிம்மம் - சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . மகம் 4 பாதம் முடிய . பூரம் 4 பாதம் முடிய , உத்திரம் 1ம் பாதம் வரை . பலன்கள் மதிப்பு 30%



    சனி பெயர்ச்சி பலன்கள் முழுவதும் சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டது . இது பொது பலன்களே !!!!!!

    சனி பகவான் சிம்ம ராசிக்கு பகை பெற்றவர் . அவர் ராசிக்கு 6க்கும் , 7க்கும் உடையவர் . சிம்ம ராசி ஸ்திர ராசி . ஸ்திர ராசிக்கு 3ம் இடம் மற்றும் 8ம் இடம் மாரக ஸ்தானம் . இந்த இடத்தில் இருக்க கூடிய கிரகங்கள் , மற்றும் கோச்சாரத்தில் இந்த இடத்தில் வரும் கிரந்கங்கள் நன்மைகள் செய்யாது . கடந்த காலம் முழுவதும் சனி பகவான் 3ம் இடத்தில் இருந்து நன்மைகள் குறைவே ! இப்போது சனி பகவான் 4ம் இடத்துக்கு வருகிறார் . இந்த இடம் சனி பகவானுக்கு உகந்த இடம் இல்லை . இதை அர்தாஷ்டம சனி என்று சொல்வார்கள் . இதனால் கெடு பலன்களே நடக்கும் . சனி பகவான் 4ம் இடத்தில் சஞ்சரிக்கும்போழுது , இதயம் சம்பந்தமான நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் வண்டி , வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது . இடம் சம்பந்தமான பிரச்சனைகள் வரும் . தாய்க்கு உடல் நிலை பாதிக்கும் . பிள்ளைகளால் விரயம் ஏற்படும் . சொந்த தொழில் செய்பவர்கள் பாதிப்பு அடைவார்கள் .

    சனி பகவான் குரு பகவான் நட்சத்திரமான விசாகத்தில் சஞ்சரிக்கும் பொழுது , பிள்ளைகளால் மருத்துவ செலவு ஏற்படும் . மேலும் சிலருக்கு அவமானம் ஏற்பட வாய்ப்பு உண்டு . பூர்விக இடத்தால் பிரச்சனைகள் உண்டாகும் .

    சனி பகவான் தன சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் சஞ்சரிக்கும் பொழுது மனைவியால் சில பிரச்சனைகள் உண்டாகும் . சின்ன ,சின்ன , கருத்து வேறுபாடு உண்டாகும் . மேலும் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்துக்கு மாற்றம் கொடுக்கும் .சனி பகவான் 7ம் பார்வையால் தொழில் ஸ்தானமான 10ம் இடத்தை பார்ப்பதால் , தொழில் சம்பந்தமான பிரச்சனை ஏற்படும் . வேலை செய்பவர்கள் பதவி பறிபோகும் நிலைமை உண்டாகும் .

    சனி பகவான் புதன் நட்சத்திரமான கேட்டையில் சஞ்சரிக்கும் பொழுது பணத்தட்டுப்பாடு வரும் . இதனால் கடன்வாங்கும் நிலை ஏற்படும் .

    மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி சிம்ம ராசிக்கு நல்ல பலன்கள் இல்லை . தினமும் கோவிலுக்கு செல்வது சிறப்பு

    ReplyDelete
  10. கடகம் - சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . புனர் பூசம் 4 ம் பாதம் , பூசம் 4 பாதம் முடிய , ஆயில்யம் 4 பாதம் முடிய பலன்கள் மதிப்பு 40 %



    சனி பெயர்ச்சி பலன்கள் முழுவதும் சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டது ! இது பொது பலன்களே !!!!

    சனி பெயர்ச்சி கடக ராசிக்கு சுமாரான பலன்களே கொடுப்பார் . கடந்த இரண்டரை வருடம் அர்த்தஷ்டமா சனி , படாதபாடு படுத்திருப்பார் . அனால் இந்த இரண்டரை வருடம் அந்த கஷ்டங்கள் இனி இல்லை . 16.12.2014 அன்று சனி பகவான் பெயர்ச்சி ஆகி உங்கள் ராசிக்கு 5ம் இடத்துக்கு வருகிறார் . இந்த இடம் சனி பகவானுக்கு உகந்த இடம் இல்லை . கடக ராசிக்கு சனி பகவான் பகை பெற்றவர் . 7ம் இடம் மற்றும் 8ம் இடம் இடத்துக்கு உரியவர் . 5ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும்போழுது , குழந்தைகளுக்கு ஆகாது . பிள்ளைகளுடன் சண்டை சச்சரவு ஏற்படும் . மேலும் பூர்வீக இடங்களால் , வழக்கு ஏற்பட்டு நீதிமன்றம் வரை செல்ல நேரிடும் . வேலை யில் உள்ளவர்கள் இடம் மாறுவார்கள் . சொந்த தொழில் செய்பவர்கள் வேறு தொழில் செய்ய வழி வகுக்கும் .

    சனி பகவான் ""விசாகம் "" நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போழுது, வம்பு , வழக்கு , தந்தைக்கு மருத்துவ செலவு போன்றவைகள் நிகழும் . இந்த காலகட்டத்தில் பிள்ளைகளின் படிப்பு மந்த நிலை ஏற்படும் . 10ம் இடத்துக்கு 8ம் இடம் 5ம் இடம் . இதனால் சொந்த தொழில் செய்பவர்கள் நஷ்டம் அடைவார்கள் .

    சனி பகவான் "'அனுஷம் "" நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பிள்ளைகளுக்கு மருத்துவ செலவு உண்டாகும் . இந்த கால கட்டத்தில் பூர்விக இடத்தால் பிரச்சனை ஏற்படும் . மனைவி வழியில் திடீர் பணவரவு ஏற்படும் . 2015 ஜூன் மாதம் வரை சனி பகவானை குரு பகவான் 5ம் பார்வையால் பார்ப்பதால் 6 மாதம் வரை எந்த கஷ்டமும் வராது .

    சனி பகவான் ""கேட்டை " நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழு குடும்பத்தில் விரய செலவு ஏற்படும் . சனி பகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தை தன் 10ம் பார்வையால் பார்ப்பதால் வருமானம் தடைபடும் .10ம் இடத்துக்கு 2ம் இடத்தை சனி பகவான் தன் 7ம் பார்வையால் பார்ப்பதால் , சொந்த தொழில் செய்பவர்கள் நஷ்டம் அடைவார்கள் . 7ம் இடத்தை சனி பகவான் தன் 3ம் பார்வையால் பார்ப்பதால் மனைவிக்கு மருத்துவ செலவு ஏற்படும் .

    கடக ராசிக்காரர்கள் , 1 வருடம் சனி பகவானின் இன்னல்களை அனுபவித்து ஆகவேண்டும் . மீதி ஒன்றரை வருடம் குரு பகவானின் அருளால் கஷ்டங்கள் குறையும் .

    ReplyDelete
  11. மிதுனம் - சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை மிருகசீரிடம் 3,4 பாதம் , திருவாதிரை 4 பாதம் முடிய , புனர்பூசம் 1, 2,3 பாதம் வரை . பலன்கள் மதிப்பு 60%



    சனி பெயர்ச்சி பலன்கள் முழுவதும் சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டது . இது பொது பலன்களே !!!!!!!!!


    சனி பகவான் மிதுன ராசிக்கு 8க்கும் 9க்கும் உரியவர் . யோகக்காரர் .அவர் கடந்த காலம் முழுவதும் 5ம் இடத்தில் உச்சம் பெற்று , 8ம் இடபலனையும் சேர்த்து கொடுத்திருப்பார் . 5ம் இடம் சிறந்த இடமில்லை என்றாலும் , 9ம் இடத்து அதிபதி சனி பகவான் 5ல் லிருந்து கடந்த இரண்டரை வருடம் , நல்ல பலனும் கொடுத்திருப்பார் , கெட்ட பலனும் கொடுத்திருப்பார் . ஆனாலும் கடந்த காலம் சனி பகவானால் நன்மை அடைந்திருபிர்கள் . சனி பகவான் தற்போது ராசிக்கு 6ம் உபஜய ஸ்தானத்தில் சஞ்சரிக்கபோகிறார் . இது சனி பகவானின் பகை வீடு .இந்த நீர் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது மிதுன ராசிக்காரகள் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும் . சொந்த தொழில் செய்பவர்கள் நன்மை அடைவார்கள் . 10ம் இடத்துக்கு 9ம் இடத்தில சனி பகவான் சஞ்சரிப்பதால் சொந்த தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் அடைவார்கள் . இந்த இரண்டரை ஆண்டு நல்ல பலன்கள் , அதிகமாகவும் , கெடுபலன்கள் குறைவாகவும் நடக்கும் .

    சனி பகவான் குரு பகவானின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்கள் கொடுக்க மாட்டார் . இந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது தொழில் நஷ்டமடையும் . உடல் நலம் பாதிக்க படும் . 7ம் இடத்துக்கு 12ம் இடத்தில சஞ்சரிக்கும் மனைவியால் மருத்துவ செலவு உண்டு .

    சனி பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களை வாரி வழங்குவார் . 10 ம் இடத்துக்கு 9ம் இடத்தில் , குரு பகவான் பார்வை வேறு , அதனால் சொந்த தொழில் செய்பவர்கள் , தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் . அலுவலகத்தில் பணி புரிபவர்கள் , எதிர் பாராவிதமாக பதவி கிடைக்கும் . 9ம் இடத்துக்கு 12ம் இடம் , ராசிக்கு 8ம் இடம் , 8ம் இட அதிபதிக்கு பாதகதிபதியும் , கர்மஸ்தனதிபதி குரு பகவான் பார்வை சனிக்கு , இதனால் தந்தை பாதிக்கபடுவார் . மருத்துவ செலவு ஏற்படும் . மேலும் குழந்தைகள் உடல் நிலை பாதிக்கும் .

    சனி பகவான் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களை சனி பகவான் கொடுப்பார் . குழந்தைகள் நன்றாக படிப்பார்கள் .சனி திசை நடந்தால் அமோகமான பலன்கள் கிடைக்கும் மிதுன ராசிக்கு

    ReplyDelete
  12. ரிஷபம் - சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை கிருத்திகை 2,3,4 பாதம், ரோஹிணி 4 பாதம் முடிய , மிருகசீரிடம் 1,2 வரை பலன்கள் மதிப்பு 40%



    ரிஷப ராசி சனி பெயர்ச்சி பலன்கள் முழுவதும் சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டது . இது பொது பலன்களே !!!!


    ரிஷப ராசிக்கு சனி பகவான் 9க்கும் , 10க்கும் , உடையவர் . இவரே ரிஷப ராசிக்கு பாதகதிபதி , மற்றும் தர்மகர்மாதிபதியும் ஆவார். ரிஷப ராசி ஸ்திர ராசி . ஸ்திர ராசிக்கு 9ம் இடம் பாதகஸ்தானம் என்ற முறையில் பாதகத்தையும் கொடுப்பார் சனிபகவான் . கடந்த காலம் முழுவதும் 6ம் இடத்தில உச்சம் பெற்று ஓரளவு நல்ல பலன்களை வழங்கினார் . ஆனால் இந்த சனி பெயர்ச்சி ராசிக்கு 7ம் இடத்தில் , அதனால் நல்ல பலன்கள் ரிஷப ராசிக்கு குறைவாகவே கிடைக்கும் . ஏனென்றால் 7ம் இடம் என்பது மாரக ஸ்தானம் . அதனால் நல்ல பலன்கள் குறையும் .

    சனி பகவான் விருச்சிக ராசியில் விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்கள் நடக்காது . குரு பகவான் பார்வை வேறு ! இதனால் மனைவியின் உடல் நிலை பாதிக்கும் ,இதனால் மருத்துவ செலவு ஏற்படும் . மூத்த சகோதர , சகோதரியால் உதவி கிடைக்கும் . சொந்த தொழில் செய்பவர்கள் தொழிலில் கடன் ஏற்படும் .குடும்பத்தில் பணப்புழக்கம் குறைவாகவே காணப்படும் .குரு பகவான் ரிஷப ராசிக்கு 8க்கும் , 11க்கும் உடையவர் . இவர் கடகத்திலிருந்து மாறினால் ரிஷப ராசிக்கு நன்மை நடக்கும் . சனி பகவான் 3ம் பார்வையால் 9ம் இடத்தை பார்ப்பதால் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும் .

    சனி பகவான் தன் சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களை கொடுப்பார் . 9ம் இடத்துக்கு லாப ஸ்தானத்தில் இருப்பதால் செய்யும் தொழிலில் லாபம் வரும் . தந்தையால் லாபம் உண்டு . எதிர்பாரநிலையால் பணம் வரும் . 10க்கு 10ம் இடம் என்ற முறையில் வெளிநாடு செல்பவர்களுக்கு உகந்த காலம் . இந்த நேரத்தில் சென்றால் நன்றாக சம்பாரிக்கலாம் . மேலும் 4ம் இடத்துக்கு சனி பகவான் 4ல் கேந்திரம் பெற்று உள்ளத்தால் தாய்க்கு மருத்துவ செலவு ஏற்படும் . மனைவிக்கு ஜென்ம சனி என்பதால் , கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிய நேரிடும் .

    சனி பகவான் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது குழந்தைகளுக்கு உடல் நிலை பாதிக்க படும் . இதனால் செலவு கட்டுக்கு அடங்காமல் செல்லும் . இந்த காலகட்டத்தில் சொந்த தொழில் செய்பவர்கள் பாதிக்க படுவார்கள் . சனி பகவான் 10ம் பார்வையால் 4ம் இடத்தை பார்ப்பதால் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்துக்கு மாற்றம் கொடுக்கும் .

    இந்த சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்கு சுமாராக இருந்தாலும் , தர்மகர்மாதிபதி என்ற முறையில் , சனி பகவான் உங்களை காபாற்றுவார்.

    ReplyDelete
  13. மேஷம் - சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை அஸ்வினி 4 பாதம் முடிய , பரணி 4 பாதம் முடிய , கிருத்திகை 1 பாதம் முடிய , பலன்கள் மதிப்பு 55%




    சனி பெயர்ச்சி பலன்கள் முழுவதும் சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டது . இது பொது பலன்களே !!!!!!

    சனி பகவான் மேஷ ராசிக்கு பகை பெற்றவர் . ராசிக்கு பாதகதிபதி , மற்றும் 10ம் இடம் , 11ம் இடத்துக்கு உரியவர் .கடந்த இரண்டரை வருடம் மாரக ஸ்தானமான 7ம் இடத்தில் இருந்து பல கஷ்டங்களை கொடுத்தார் . ஆனால் இந்த ஜய வருட சனிபெயர்ச்சி மேஷ ராசிக்கு அஷ்டம சனியாக வருகிறார் . ஆனால் மேஷ ராசியை சேர்ந்தவர்கள் அஷ்டம சனியை பார்த்து பயப்பட தேவையில்லை . ஏன் என்றால் டிசம்பர் 16ந் தேதி சனி பகவான் பெயர்ச்சி ஆகி விருச்சிக ராசிக்கு வருகிறார் . விருச்சிக ராசியில் உள்ள சனி பகவானை கடகத்தில் உள்ள உச்சம் பெற்ற குரு பகவான் பார்வை பெறுகிறார் . இதனால் 6 மாதம் வரை எந்த பிரச்சனை வந்தாலும் பாதிப்பு ஏற்படாது . அதன் பிறகு 1 வருடம் குரு பகவான் ராசிக்கு 5ம் இடத்தில் அமர்ந்து மேஷ ராசிக்கு ஏற்படும் அஷ்டம சனியின் கஷ்டங்களை இல்லாமல் செய்வார் . மேஷ ராசியை சேர்ந்தவர்கள் அஷ்டம சனியின் தாக்கம் 1 வருடம் மட்டும் தான் சிரமமாக இருக்கும் .

    சனி பகவான் டிசம்பர் 16ந்த் தேதி முதல் விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தந்தைக்கு உடல் உபாதை , மருத்துவ செலவு ஏற்படுத்துவார் . தன 3ம் பார்வையாக 10ம் இடத்தை பார்ப்பதால் , தொழிலில் சிரமங்களை கொடுத்தாலும் நஷ்டம் ஏற்படாது .சந்திரனுக்கு 8ம் இடத்தில சனி இருப்பதால் தாயுடன் மன ஸ்தாபம் ஏற்படும் . தொழில் ஸ்தானத்துக்கு பாதகமான இடத்தில சனி இருப்பதால் லாபம் எதிர்பார்க்க முடியாது .

    சனி பகவான் தன சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் சஞ்சரிக்கும் பொழுது சொந்த தொழில் , மற்றும் வேலையில் உள்ளவர்கள் சிரமத்துக்கு ஆளாவார்கள் . சனி பகவான் 7ம் பார்வையாக 2ம் இடத்தை பார்ப்பதால் பணத்தட்டுப்பாடு ஏற்படும் . இதனால் கடன் வாங்க நேரிடும் . 10ம் பார்வையால் 5ம் இடத்தை பார்ப்பதால் , பூர்வீக சொத்துக்களால் பிரச்சனை ஏற்படும் . மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ செலவு ஏற்படும் .

    சனி பகவான் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது , சகோதர உறவு பாதிக்க படும் . மற்றும் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொல்லைகள் கொடுப்பார்கள் . தொண்டை சம்பந்தமான வியாதி வந்து அகலும் .படிப்பில் மாணவர்கள் மந்த நிலையை அடைவார்கள் .

    மேஷ ராசிக்கு இரண்டரை வருடம் அஷ்டம சனியில் 1 வருடம் மட்டும்தான் கஷ்டங்கள் கடுமையாக இருக்கும் . மீதி ஒன்றரை வருடம் குருபகவானின் அருளால் நல்லதே நடக்கும் .

    ReplyDelete
  14. சனி பகவான் ஜய வருடம் மார்கழி மாதம் 1 ந்தேதி , ஆங்கிலம் 16.12.2014 அன்று பெயர்ச்சி ஆகி விருச்சிகம் ராசிக்கு செல்கிறார் . இரண்டரை ஆண்டுகள் விருசிகராசியில் இருப்பார் . 12.05.2017 வரை .


    மேஷம்

    அஷ்டம சனி ஆரம்பம் . மேஷ ராசிக்கு சனி பகை பெற்றவர் .

    ரிஷபம்

    மாரக சனி . அதாவது 7ம் இடம் , சிறப்பில்லை .

    மிதுனம்

    6ம் இடம் . சிறப்பான இடம் .

    கடகம்

    5ம் இடம் .சிறப்பான இடமில்லை

    சிம்மம்

    4ம் இடம் கண்ட சனி . சிறப்பான இடம் இல்லை

    கன்னி

    ஏழரை சனி முடிவு . 3ம் இடம் வெற்றி .

    துலாம்

    2ம் இடம் . சிறப்பான இடமில்லை .

    விருச்சிகம்

    ஜென்மம் . சிறப்பில்லை

    தனுசு

    ஏழரை சனி ஆரம்பம் . 12ம் இடம்

    மகரம்

    11ம் இடம் . பாதகமான இடம் . சுமார்

    கும்பம்

    10ம் இடம் . சுமார்

    மீனம்

    அஷ்டம சனி விடும் காலம் . சுமார் .

    ReplyDelete