மோகனூர் ஸ்ரீ நாவலடியான் கோவில் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. பொன்னர் சங்கர் வரலாறு :
    நாமக்கல் வாழவந்தி நாட்டிலே காணி கொண்டிருந்தனர் பெருங்குடி வேளிர் . கொண்டி செட்டிப்பட்டி காளியம்மன் இவர்களின் குலதெய்வம் . முருங்கை நாச்சிமார் கோவிலும் இவர்களுடையதே. வாங்கல் பெருங்குடிமக்கள் பெருங்கூட்டத்தினர் . கோளாத்தாக்கவுண்டர் மனைவி பவளாத்தாவுடன் குளித்தலைக்குச் சென்றனர். நெல்விளைநாடு இவரது உரிமையானது . சோழன் அளித்தான் . மதுக்கரை செல்லியம்மன் கோவிலையும் , வெள்ளாங்குளம் ஏரியையும் இவர்கள்தான் கட்டினார் . சேர, சோழ , பாண்டியர்களுக்கு எல்லைப் போர் வந்தது . இதனைத் தீர்த்து வைத்தவரும் இவரே . சோழன் மகிழ்ந்து திருக்கரம் புலியூருக்கு அருகில் 70 வள்ளம் நிலம் கொடுத்து மணியம் , கணக்கு அதிகாரமும் கொடுத்தான் கோளாத்தக் கவுண்டர் மகன்தான் நெல்லியங் கோடன் . இவனை மசக்கவுண்டன் என்றும் , குன்றுடையான் என்றும் கூறினர் குன்றுடையானுக்கு பொன்னர், சங்கர் , அருக்காணி ஆகியோர் பிறந்தனர் .குன்றுடையான் மனைவியுடன் இரவு பகலாக உழைத்து வளநாட்டை வளப்படுத்தினான். தம்பி செல்லாக் கவுண்டன் பொறாமையால் தீமை செய்தான் . இவனுடன் வேட்டுவத் தலைவன் காளி சேர்ந்து கொண்டான் .பன்றிகளை அவிழ்த்து விட்டு அழிவு செய்தனர் . மாரிக் கவுண்டன் பாளையத்து ராக்கியண்ணனிடம் பொன்னர் சங்கர் இருவரும் கல்வியுடன் போர்ப்பயிற்சியும் பெற்றனர் . பச்சண்ண முதலி மகள் குப்பாயி அருக்காணியின் தோழியாக இருந்தாள். தங்கையின் விருப்பப்படி பொன்னர் சங்கர் இருவரும் நடந்தனர் . தாய் தாமரை நாச்சி , சின்னமலைக் கொழுந்து மணியங்குறிச்சிக் கவுண்டன். இவனுக்கு இரு பெண்கள் முத்தாயி , பவளாயி , ஆண்கள் . பொன்னர் முத்தாயியை மணந்தான் . சங்கர் பவளாயியை மணந்தான் . பொன்னர் சங்கர் , அரண்மனை கோட்டை கட்டி பெருவாழ்வு வாழ்ந்தனர் . காளியின் காணிகளையும், வரிவசூல் , பகுதிகளையும் சோழன் பொன்னர் சங்கருக்கே அளித்தான். பொறாமையால் காளியும், பங்காளியும் , சேர்ந்து சதியில் இறங்கினர் . குப்பாயியைக் கடத்திச் சென்றனர் .சங்கர் படையுடன் சென்று வேட்டுவர்களைக் கொன்று மீட்டு வந்தான் . குப்பாயி இறந்தாள்.தற்கொலை செய்து கொண்டாள். சோழன் தோட்டி பொன்னர், சங்கர் படையாளாய் இருந்தான் . பொன்னரை வெள்ளாங் குளத்து ஏரிக்கு ஆசாரிக்காக சத்தியம் செய்ய அனுப்பினர் . அந்தச் சமயத்தில் படை எடுத்து சங்கரைத் தாக்கச் சென்றனர் . சங்கர், வேட்டுவப் படைகளை வெட்டி வேழ்த்தினான் . போன்னரைச் சூழ்ச்சியால் கொன்றனர் . சங்கரும் உடன் தற்கொலை செய்து கொண்டான் . தங்காயி அரண்மனைக்குத் தீயிட்டு அண்ணியர்களையும் கொன்று விட்டு படுகளம் வந்து அழுதாள். அவள் அழுகை இன்றும் கேட்கும் . வளநாட்டு வீரப்பூர் சென்றாள். இந்த பொன்னர் சங்கர் இருவரும் வேட்டுவப் படைகளைக் கொன்று கொங்கு வேளாளர்களைக் காப்பாற்றினர். இந்தப் பெருமையால் தான் பெருங்குடிக்குலம் சிறப்பினைப் பெற்றது . விதரிசம்பாளையத்து பொன்னாச்சியம்மன், சின்ன பொன்னச்சியம்மன் பொன்னர் சங்கர் மனைவியர்களே , நாமக்கல் , ராசிபுரம் , காக்காவரி அண்ணமார் கோயிலும் வாங்லாயி, காளியம்மன் கோவில்களும் , சின்னாண்டவர், பெரியாண்டவர் கோயில்களும் கொங்கெங்கும் பரவியுள்ளன . ஒரு வீரவரலாறு புகழ் பெறுகிறது . காங்கேய நாட்டுக் காணிப்பாடல் 96 கீர்த்திப் பாடல்களில் பெருங்குடி மக்கள் கீர்த்தி சொல்லப்படுகிறது . காசினி மதிக்க வருவாங்கல் பெருங்குடி என்று புகழப்படுகிறது . கரூர் பசுபதி ஈசர் கோவிலுக்குப் பால் வழங்கும் சிறப்பு பெருங்குடிக்கு உண்டு . வரகுண்ணாப் பெருங்குடி மக்கள் வரகு உண்ணமாட்டார்கள் . வாங்கல், புலியூர் , பிடாரமங்கலம்,காங்கேயம் , முருங்கை , வகுரம்பட்டி , நாமக்கல் , பெரியபட்டி , கொண்டி ,செட்டிப்பட்டு , வாழவந்தி , குளித்தலை , கரூர் ஆகிய ஊர்கள் எல்லாம் பெருங்குடிமக்களின் காணியூர்களாம் . பெருங்குடிக் குலத்தில் பொன்னர் , சங்கர் வீர வரலாறு அடங்கியுள்ளது .

    ReplyDelete
  2. கொங்கு வேளாளர் குலக்காணியாளர்
    கொங்கு வேளாளர் கொங்கு மண்ணின் மைந்தர்கள் இயற்கையோடு வாழ்ந்தவர்கள் தங்களது குலப்பெயர்களை இயற்கையாக அமைத்துக் கொண்டனர் . கூட்டமாக வாழத்தலைப்பட்டவர்கள் குலக்காணியாளர்களாக பெயர் சூட்டிக்கொண்டனர் . விலங்கு, பறவை, பூப்பெயர்களோடு செயல்பாடுகளையும் சேர்த்தனர் . சிறப்புப்பெயர் பூண்டனர் . ஆதிக்குடிகள் அறுபது என்றனர். அறுபது தொண்ணூறு ஆகி நூற்றுநாற்பத்திரண்டாக வளர்ந்தன 18 நூற்றாண்டுக்குப்பின் தோன்றிய அழகுமலைக் குறவஞ்சி 142 குலக்காணியாளர் பெயர்களைப் பட்டியில் இட்டுக்கூறுகின்றது. ஓதாலர் இதனைப்பாடினார்

    குலந்தழைக்க , குடிவளர குலக்காணிகளும் பெருகி வருதல் இயல்பு , புதியன புகுதலை ஏற்பது அற்புடைமை 60 குலக்காணியாளர் பற்றி முன்னரே எழுதப்பட்டதால் மீதியை இப்பகுதியில் எழுதுவேன் இதற்கு மேலும் குலப்பிரிவுகள் இன்று பல்கி இருப்பதையும் ஏற்கவேண்டும் . ஒரு மரத்தின் கிளைகளை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும் .

    அழகு மலைக் குறவஞ்சி கூறிய 142 குலக்காணிப் பெயர்களைப் பட்டியல் இடுவோம் முன்னோர் பெயர்களைத் தாங்கியும் சில குடிப் பெயர்கள் அமைகின்றன அவைகளையும் நாம் ஏற்க வேண்டும்.

    ReplyDelete
  3. 142 குலப்பெயர்கள்
    1 . பொன்னர் 72 . சன்
    2 . சங்கர் 73 . வாணர்
    3 . பூசர் 74 . மாதுரி
    4 . செம்பூதர் 75 . பைதரி
    5 . காடர் 76 . ஆதினன்
    6 . ஆவன் 77 . விரவுளன்
    7 . சாத்தந்தை 78 .அவரியன்
    8 . கோவர் 79 . சவுரியன்
    9 . குழாயர் 80 . குயிலர்
    10 .கோவேந்தர் 81 . குங்கலி
    11 . செம்பர் 82 . பயிரன்
    12 . பாவலர் 83 . பரமன்
    13 . பண்ணர் 84 . பங்க்சமன்
    14 . மாடை 85 . பூதியன்
    15 . நாரை 86 . மழஅழகர்
    16 . நச்சந்தை 87 . மாதங்கன்
    17 . ஆந்தை 88 . தேர்டை
    18 . பொருளந்தை 89 . துந்துமன்
    19 . ஒழுக்கர் 90 . சோமன்
    20 . வாச்சர் 91 . தழிஞ்சி
    21 .கண்ணந்தை 92 . காடன்
    22 . மணியன் 93 . உவணன்
    23 . தூரன் 94 . கவுரி
    24 . செங்கனி 95 . நாரை
    25 . படுகுனி 96 . நீருகை
    26 . சேகர் 97 . நந்தர்
    27 . செங்கண்ணர் 98 . கொட்டாரன்
    28 . வண்ணக்கர் 99 . கூறுபன்
    29 . சேரன் 100 . உழுவார்
    30 . சிலம்பன் 101 . பனங்காடை
    31 . புத்தன் 102 . சேவழன்
    32 . பொடியன் 103 . புன்னை
    33 . பூந்தன் 104 . தேமான்
    34 . வேந்தன் 105 . சுரபி
    35 . முத்தன் 106 . முவர்
    36 . காரி 107 . மொயம்பன்
    37 . முலன் 108 . கவளன்
    38 . நீலன் 109 . பெருங்குடி
    39. கணவாளன் 110 . வேந்தன்
    40 . அழகன் 111 . பிரமன்
    41 . விளியன் 112 . இந்திரன்
    42 . விளையன் 113 . கருங்கண்ணன்
    43 . வில்லி 114 . வேணியன்
    44 .செல்லன் 115 . விரதர்
    45 . ஆடை 116 . கம்பன்
    46 . ஆதி 117 . அக்கினி
    47 . அந்துவன் 118 . மாடை
    48 . சேடன் 119 . தக்கவ
    49 .பதரி 120 . சாத்துவராயன்
    50 . சேரலன் 121 . பாலியன்
    51 . பிறழர்ந்தை 122 . நெய்தலி
    52 .வரிவிழி 123 . பாம்பன்
    53 . பவளன் 124 . கட்செவியன்
    54 . பனை 125 . விலோசனன்
    55 . பூந்தாரன் 126 . தனவந்தன்
    56 . கோரக்கன் 127 . அனகன்
    57 . பாண்டியர் 128 . சனகன்
    58 . கணக்கர் 129 . ஆதித்தேயன்
    59 . குணியன் 130 . கும்பன்
    60 . குண்டரி 131 . முனையன்
    61 . கூரை 132 . கிள்ளியன்
    62 . கீரை 133 . முக்கண்ணன்
    63 . நீலன் 134 . கொண்புரங்கி
    64 . சூலன் 135 . களிங்சி
    65 . நேரியன் 136 . கோதனு
    66 . சூரியன் 137 . உறுகுலன்
    67 . சோதி 138 . வீரன்
    68 . தேவேந்திரன் 139 . முழுக்காதன்
    69 . மீனவன் 140 . வெள்ளம்பர்
    70 . எண்ணெடுவன் 141 . மாயவர்
    71 . வெண்டுவன்

    ReplyDelete
  4. நச்சந்தை:
    சாத்தன் தந்தை சாத்தந்தை குலத்திலிருந்து பிரிந்து வந்தது . இது நலச்சந்தை ஆகி நச்சந்தை ஆகி விட்டது . காலத்திற்கேற்ப சொல் சிதைவடைந்து மாறிவிடுகிறது . கோயம்புத்தூர் கோவை ஆனது குரூர் நசியனர் நாகம்பள்ளி குன்றத்தூர் இவர்களின் காணிகளாகும்.

    ஒழக்கன்குலம் :
    ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்றார் வள்ளுவர் . உழுகின்றவன் எதிலும் நேராக உழவு செய்தல் போல் ஒழுக்கம் உடையவனாக இருப்பான் உழவோன் ஒழக்கன் ஆவதில்லை . ஒழுக்கமுடைய உழவர் ஒழக்கர் குடி ஆகின்றான் . தாராபுரம் , பொள்ளாச்சி , உடுமலை , பழனி , ஆத்தூர் , வட்டங்களில் காணி கொண்டவர்கள் இவர்கள் .

    படுகுன்னி :
    உன்னுதல் என்பதற்கு நினைத்தல்என்று பொருள் . எதையும் எண்ணிப்பார்த்து செய்கின்றவர்கள் படுகுன்னியர் படு மிகுதிப்பொருள் தரும் உரிச்சொல்லாக்கும் கொங்கு எங்கும் பரவி உள்ளனர் .

    சங்கர் :
    பொன்னர் சங்கர் உடன்பிறந்தோர் பொருங்குடியில் இருந்து பிரிந்த காணியாளர்கள் பொன்னர் சங்கர் பெருங்குடி மக்களின் காணிகளே இவர்களுக்கும் உரியது .

    காடர் :
    காடுறை வாழ்நர் காடர் எனப்பட்டனர் . முல்லை நிலத்து வேளாளர்கள் காடர் எனலாம் . காடெல்லாம் கழனியாக்கிய பெருமை இவர்களுக்குண்டு . குன்றுடையான் போல காட்டை கழனியாக்கியவர்கள் காடர் எனப்பட்டனர் காடை கழனியாக்கியவர்கள் காடர் எனப்பட்டனர். காடை குலத்தவர் வேறு , காடர் வேறு .

    ReplyDelete
  5. கோவர் :
    கோ அரசன் கொங்கில் அரசாண்ட குறுநில மன்னர் வழியினர் கோவர் எனப்பட்டனர் கோனூர் காணியில் வாழ்ந்தவர்கள் வாழ்பவர்கள் .

    பாவலர் :
    ஆ கெழகொங்கர் பாவேந்தராகவும் இருந்தனர் . பாவலர் பலதைக்கண்டது கொங்கு பாவலர் வழிமுறையினர் இவர்கள் இவர்கள்தாம் திருமணத்திற்குபடபின் புலவராக வாழ்த்து கூறுவோர் .

    நாரைக்குலம் :
    நாரை கொங்கு பறவை மருதநிலத்துப் பறவை ஆந்தை , செம்போத்து போல நாரை பெயரை ஏற்றவர்கள் இவர்கள் நாராய்நாராய் செங்கல் நாராய் என்று புறம்பாடும் நாரை என்பது நாடை என்று மாறியுள்ளது .

    வாச்சர்குலம் :
    உழவுத் தொழிலையே வாய்ப்பாகக் கொண்டு வாழுவோர் வாச்சர் எனப்பட்டனர் . வாய்ச்சர் என்ற சொல்லே வாச்சர் எனப்பட்டது . வாச்சான் போச்சான் என்ற தொடர் கொங்கில் உள்ளது உழவுத்தொழிலில் செல்வம் பெறுதல் வாச்சன் போச்சான் தான் வரும் அல்லது போகும் .

    சேகர்குலம் :
    சே என்றால் காளை கலித்தொகை செம்மை நிறக்காளையே சே என்றே கூறுகிறது . முல்லை நில மக்கள் சே அடக்கி மணஞ்செய்தல் உண்டு .

    புத்தன் :
    கொற்றன் கொத்தன் ஆயினான் புற்றன் புத்தன் ஆயினான் புல்லை நீக்கி நெல்லை வ்ளைவித்தன் புத்தன் ஆனான் .புத்தனை வணங்கியவன் புத்தன் ஆகவில்லை .

    சிலம்பர் :
    செலம்பன் கூட்டத்தினர் சிலம்பர் ஆயினர் . கொழிசிலம்பர் என்பர் மணிவாசகர் . மோழி சிலம்பர் சிலம்பும் கொங்கு கெங்கும் செலம்பன்குலத்தினர் .

    ReplyDelete
  6. கண்ணந்தை :
    ஆந்தை குலத்தினரும் கண்ணன் குலத்தினரும் இணைந்து தோன்றியகுலம். கண்ணந்தை அமராவதி ஆற்றங்கரையோர ஊர்களைக் காணிக் கொண்டவர்கள் இவர்கள் .

    அழகன் :
    அழதுநாட்சியம்மனை குலதெய்வமாகக் கொண்டவர்கள் அழகன் கூட்டத்தினர் . பொத்தனூர் செட்டிபாளையம் பாலத்துறை ஆகிய ஊர்களில் காணி கொண்டவர்கள் இவர்கள் அழகுமலை குறவஞ்சி பாடியவர் இக்குலத்தினரே.

    வரிவழி :
    விழியன் கூட்டத்தின் பிரிவினர் தாம் வரிவிழி கூட்டத்தினர் தண்டல் நாயகர்களாக இருந்தனர் . வரிவிளிப்போர் இவர்கள் வரி விழி ஆனது .

    பனையன் :
    தினையளவு நன்றி செய்தாலும் பனையளவாக மதிப்பவர்கள் இவர்கள் . திணை விளைவிக்க பனையாக உழைப்பவர்கள். பனங்காடர் குலத்தின் பிரிவினர் இவர்கள் .

    பூந்தாரன் :
    பனம்பூமாலை சேரர்க்குரியது. சேரனுக்கு முடிசூட்டும் பெண் கொடுக்கும் உரிமையும் பெற்றவர்கள் இவர்கள் . பூந்துறை நாட்டினர் இவர்கள் .

    கணக்கர் :
    நாட்டாண்மை செய்தவர்களிடம் கணக்கு பார்த்தவர்கள் கணக்கர்கள் . கணக்கிட்டு என்னி விதைப்பவர்கள் இவர்கள் . கண்ணந்தை குலத்தோடு தொடர்புடையவர்கள் .

    சூழகுலத்தான் :
    சூல் கொண்ட மேகம் மழை நோக்கி வாழ்பவன் சூழ குலத்தோன் சூல் கொண்டு அவினைப்புரந்து செல்வம் சேர்ப்பவன் இவனே சூலாயுதம் கொண்டவனை வழிபடும் இவர்கள் சூழகுலத்தான் ஆயினர் .

    மீனவன் :
    வெள்ளி முளைத்திட வெள்ளாமை செய்தவன் மீனவன் . மீன் கண்டு உழவு செய்ய இறைக்கச் செல்பவர்கள் மீனவன் ஆயினர் . மீன்பிடிப்போர் அல்லர் .

    பைதரி :
    காங்கேய நாட்டில் அகிலாண்டரம் உள்ளது . அங்குள்ள பதிரியர் ஆயி அம்மனை வழிபடுவர் . பதரிகுலத்தின் வழியினர் . இந்த பைதிரியர்கள் காங்கேய நாடு இவர்களுக்கும் காணி நாடாகும் .

    ReplyDelete
  7. பிறழந்தை :
    பொருள்தந்த குலத்தினர் வழியில் வந்தவர்கள் பிறழந்தை குலத்தினர் . பிறழந்தை குலத்தினரும் இவர்களுக்கும் ஒருவழி முறையினர் ஆந்தை குலத்திலிருந்து பிரிந்து வந்தவர்கள் இவர்கள் . மோரூர் காங்கேயம் இவர்களின் காணிகளாகும் .

    கோரக்கர் :
    சித்தர்களின் கோரக்க முனிவர் ஒருவர் . பதினெண்சித்தர்களில் இவர் ஒருவர் இந்த வழியில் வந்தவர்கள் கோரக்கர் எனப்பட்டனர் .

    குனியன் :
    குனிந்ததலை நிமிராது காணியில் உழைத்தும் பயன்பெறாது குணித்த புருவமும் கொவ்வை செவ்வாயும் உடையாளை வணங்கி வாழ்க்கை நடத்தியவர்கள் இவர்கள் . குணியக் குணிய கதிரவன் கதிரவன் குட்டினாலும் பணிந்து பயிர் செய்பவர்கள் இவர்கள்.

    நேரியன் :
    நேரிய வழி நடந்து ஏரினை நம்பி வாழ்பவர்கள் நேரியர் எனப்பட்டனர் . நேரியத்தொழில் ஏரினைப் பூட்டலே.

    சோதியர் :
    கதிரவன் சோதிகண்டு வணங்கி ஏரிடை உழைப்போர் சோதியர் ஆயினர் . சோதியாய் சுடராய் சுடரொளி விளக்காய் இருப்பவனை வழிபடுகின்றவர்கள் .

    எண்ணெய்குலம் :
    நன்செய் நிலத்தில் பணியற்ற போது புன்செய் நிலத்தில் எள்ளினை விதைப்பவர்கள் இவர்கள் ஆ நெய் கிட்டாதபோது எள்நெய் பயன்படுத்துவோர் இவர்கள் .

    வாணர் :
    காடுறைவாழ்நர் வானரப்படை ஆயினர் சேரர்வானவர் எனப்பட்டனர் சேரங்குலத்தார் வானவர் ஆயினர் . கொங்கு நாடெங்கும் பரவலாக வாழ்பவர்களுக்கு காணி சொல்லப்படவில்லை

    ஆதினர் :
    ஆதி அந்துவன் குலத்தினர் போல ஆதியிலே கொங்கு மண்ணில் காணி கொண்டவர்கள் இவர்கள் . ஆதிக்கம் செய்பவர்களையும் ஆதினம் என்பர் .

    களிஞ்சி :
    கழஞ்சு களிஞ்சி ஆனது நெற்களஞ்சியம் சமைத்தவர்கள் களிஞ்சியர் ஆயினர் . கழனி உழவர் களஞ்சியம் வளர்ப்போர் ஆவர் .

    ReplyDelete
  8. நீலன் :
    நீலமணி மிடற்று ஒருவன் சிவன் . நீல நிறம்முடையவன் திருமால் . கொங்கு வேளாளர் இருவரையும் வணங்குவோர் ஆவர் . நீலவன் என்று கூறுவோர் .

    கடுந்துளி :
    தளிரன்னபயிருக்கு மழைத் துளி வேண்டும் விசும்பின் துளிவிழின் அல்லால் பசும்புல் தலையும் காணமுடியாது வானோக்கி வாழும் குடியினர் கடுந்துளியினர் .

    மாதங்கள் :
    வான்மழை பெய்யாது ஆதங்கப்படுபவன் இந்த மாதங்கள் பொன்மனிசிறக்க நெல்மணி விளையவைப்பவன் மாதங்க குலத்தினன் .

    குண்டரி :
    நெல்லரி கொண்டுதான் வீட்டில் அடுப்பு எரியும் . அறியும் சிறப்படைவான் . வானம் வறக்கும் மேல் வானோர்க்கும் ஈண்டு சிறப்போடு பூசனை செல்லாது குண்டரியோர் நல்லரி சிறக்கவைப்பர் .

    சூரியன் :
    உழவனுக்கு சூரியன் கன் கண்ட தெய்வம் சூரியவழிபாடு பொங்கல் . காக்கும் சூரியனுக்கு நன்றி காட்டவே சூரியன் சூரியனுக்கு பொங்கல் வைத்து படைக்கின்றனர் முதன்மை குலத்தினர் இவர்கள் .

    ReplyDelete
  9. தேவேந்திரன் :
    உழவான் உலகுக்கு உயிர் . தேவர்களுக்கு தலைவன் தேவேந்திரன் கொங்கு நாட்டின் மேட்டு நிலங்களை உழுதுண்டு வாழ்வதையே உயிர் மூச்சாக கொண்ட குடிமக்கள் தேவேந்திரர்களாக மதிக்கப்பட்டவர்கள் தேவேந்திரர் ஆகினர் . கோ - பசு - கோவேந்தர்களும் இவர்கள் தான் . சேர அரசனுக்கு படைத்தலைவர்களாகவும் பாண்டிய அரசனுக்கு தளபதிகளாகவும் இருந்த இவர்கள் நாமக்கல் மாவட்டத்தையே முதற்கானியாக கொண்டு வாழ்ந்தார்கள் . திருச்செங்கோட்டிற்கு தெற்கே பரமத்திக்கு வடக்கே பரமத்திவட்டம் கபிலர்மலைக்கு அருகில் மணியனூர் , கந்தம்பாளையம் , தாண்டி சுள்ளிபாலையத்தில் ஸ்ரீ கவுண்டச்சி அம்மன் ஆலயம் உள்ளது . பெருங்குறிச்சியில் பொன்காளியம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டத்தில் இரண்டாயிரம் குடும்பமும் இந்த அம்மன்களுக்கு குடிப்பாட்டு மக்கள் ஆவார்கள் .
    வெள்ளக்கோயில் தொட்டாம்பட்டி முத்துசாமி கோவில், தேவேந்திரகுல காணிக்கோவிலாகவும் உள்ளது . நாட்ராயன் கோவிலுக்கு அருகில் இது அமைந்துள்ளது . குன்றத்தூர் கல்வெட்டிலும் பெருமாநல்லூர் கல்வெட்டிலும் தேவேந்திரர் குலம் குறிக்கப்பட்டுள்ளது . வீரபாண்டிய தேவருக்கு பாரிச நாட்டு பெரும்பழனம் வேளாளர் தேவேந்தைகளான என்று கல்வெட்டு கூறும் . வீரபாண்டியனது தளபதிகளாக இவர்கள் இருந்தனர் என்பர். ஆண்குறிச்சி , பெண்குறிச்சி அழகான பெருங்குறிச்சி என்று ஒரு ஆங்கிலேயன் சிறப்பித்த பெருங்குறிச்சியில் பொன்காளியம்மன் கோவில் உள்ளது. 18 ஊர் மக்கள் 1350 குடும்பங்கள் பொன்காளியம்மனை குல தெய்வமாக வழிபடிகின்றனர் .
    நல்லூர், கவுண்டிபாளையம் , மணியனூர் , சித்தம்பூண்டி , குன்னமலை , சுள்ளிபாளையம் , பெருங்குறிச்சி , திடுமல், இராமதேவம் , தேவனாம்பாளையம் , குப்புரிக்கா பாளையம் , சித்தாளந்தூர் , உஞ்சனை , மேட்டுப்பட்டி , வசந்தபுரம் , பெரியசோழிபாளையம், வெடியரசம்பாளையம், ஊத்துக்காடு , மோழிப்பள்ளி, ஏரிக்காடு , நல்லிப்பாளையம் , நாமக்கல் , ஆரியூர், வெள்ளக்கோயில் , இளம்பிள்ளை ,தோட்டம்பட்டி, ஆகிய ஊர்களில் எல்லாம் தேவேந்திர குலமக்கள் வாழ்கின்றனர்.

    ReplyDelete
  10. மாதுரி :
    மாதரி கேள் இம்மடந்தை தன் கணவன் என்று கண்ணகி கோவலனை அடிகளார் அறிமுகப்படுத்தினார். மதுரையில் இடைக்குல மடந்தை அவள் . முல்லை நிலத்து வேளிர் மாதிரியை போற்றிகுலப்பெயர் அமைத்தார்களோ ?

    விரவுளன் :
    விரைவு உள்ளான் எர்தொழிலில் விரைந்து தொழில் கேட்டும் ஞாலம் விரைந்து உழுவார் சோம்பி உழவினார் கைமடங்கின் உலகில் எதுவும் இல்லை .

    சுவரியன் :
    உவரியன் சுவரியன் ஆனது நத்தம் புறம்போக்கெல்லாம் உவர்மண்ணது அதில் காணி கொண்டவர்கள் சுவரியர்கள் .

    குங்கலி :
    கொங்கனி குலத்தான் மருவி குங்கலி ஆனது கொங்கு கவி குங்கலி ஆகுவதும் உண்டு . கொங்கனி வழியினர் எங்கும் பரந்து வாழ்பவர்கள் இவர்கள் .

    பரமன் :
    பரமனை குல தெய்வமாக ஏற்றவர்கள் இவர்கள் . இக்குலத்தினர் பரமன் என்றே பெயர் வைத்துக்கொள்வர் . வழி வழியாக இப்பெயரை வைப்பவர்கள் இவர்கள்.

    தந்தமன் :
    தந்துமன் என்பதே துந்துமன் ஆனது மன் நிலைப்பது தந்தை கொடுத்த நிலத்தை செல்வத்தை நிலைக்கவைப்பேன் என்ற உறுதி அளிப்பவர்கள் இவர்கள் . செயலால் குலப்பெயர் கொண்டவர்க்கள் இவர்கள் .

    புன்னை :
    புன்னை அரும்பேயப்ப என்ற தொடர் இலக்கியத்தில் வருகிறது புன்னை மரம் குறிஞ்சி நில மரம் கொங்கு குறிஞ்சி வளமுடையது பண்ணை குலத்தினர் வேறு , புன்னை குலத்தினர் வேறு.

    கம்பகுலம் :
    சடையப்ப வள்ளல் கம்பனை ஆதரித்தான் கம்பர் கொங்கு வேளாளர்களுக்கு மங்கல வாழ்த்து அளித்தான் சடையப்ப வள்ளல் வெள்ளாளக் கவுண்டரே அவர்மரபினர் கம்பப் குலத்தினர் ஆயினர்.

    ReplyDelete
  11. கொண்டிரங்கி :
    இரக்கம் கொண்டவர்கள் கொண்டிரங்கி கூட்டத்தினர் கொண்டியைக் காணியாகாக் கொண்டவர்கள் .

    பாலியன் :
    ஆ புரந்து எருமை மேய்த்து பான்மடை பெருக்கியவர்கள் பாலியர்கள்.

    கட்செவி :
    உழவையை கண்ணாக செவியாகக் கொண்ட குலத்தினர் இவர்கள் .

    அனகன் :
    ஆனகன அனகன் ஆயிற்று ஆவினை அகத்து வைத்துக் காத்தவர்கள் அனகன் குலத்தினர் .

    கும்பன் :
    கொம்பாகிமரமாகி கிளைத்த கூட்டத்தின் மக்கள் கொம்மன் ஆயினர் கொம்பன் என்பதற்கு கெட்டிக்காரன் என்று பொருள் .

    முக்கண்ணன் :
    முக்கண்ணன் சிவபெருமான். சிவபெருமானையே குலதெய்வமாகக் கொண்டவர்கள் முக்கண்ணன் கூட்டத்தினர் .

    சவுரியன் :
    சவுரிகாளி என்ற பெயரை வழி கொண்டவர்கள் காளியம்மனை குலதெய்வமாகக் கொண்டவர்கள் .

    பஞ்சமன் :
    ஐந்துபேர் பஞ்சபாண்டவர்கள் போல் வாழ்ந்தவர்கள் பஞ்சம் வந்த காலத்தும் பஞ்சை நூற்று வாழ்ந்தவர்கள் இவர்கள் பஞ்சமரபினர் என்போரும் இவர்களே .

    ReplyDelete
  12. விரதர் :
    ஆறுகுலத்தினர் ஒரு கூடிவாழ்ந்த இவர்கள் அறுகுலவிரதர் எனப்பட்டனர் விரதம் இருந்து பட்டினிகிடந்தும் வெள்ளாமை செய்தவர்கள் இவர்களே .

    சோமன் :
    சோமசுந்தரனை வழிபடும் சுட்டத்தினர் . சோமன் ஆயினர் சோமு என்ற பெயர் வைத்துக் கொள்பவர்கள் .

    உவணன் :
    உவந்தளிப்போர் விருந்தளிப்போர் உவணர் ஆயினர் உவவனம் மருங்கில் என்ற தொடர் இலக்கியத்தில் உண்டு.

    கொட்டாரா :
    ஒரே இடத்தில் பயிர்செய்யாது கொட்டாரம் குடிசை அமைத்து அங்காங்கே பயிர் செய்பவர்கள் இவர்கள் .

    தேமான் :
    தொமான் குலத்தினர் தேமான் குலத்தினர் ஆயினர் . தேமாங்கனி வைத்து புரந்த நன்னன் குடியினர் இவர்கள் .

    மொய்யன்:
    திருமணத்தில் மொய்வைப்போர் உண்டு மொய் மொய்த்தல் பலரும் சேர்ந்து ஒன்றுகூடி மொய் வைப்பதால் மொய் பணம் உற்றுழி உதவு பாங்கினர்.

    வேந்தன் :
    அரசன் என்ற பொருளுடைய சொல் இது வேந்த புரந்தந்த கொற்றவேந்தே என்று சேரர் சிறப்பிக்கப்படுவர் சேரவழியினர் வேந்தன் ஆயினர் .

    கருங்கண்ணன் :
    கண்ணங்குலத்திலிருந்து பிரிந்து வந்தவர் கருங்கண்ணன் ஆயினர் . கருங்கண் காளைக்கு உரிமையாளர்கள் . உறுப்பால் பெயர் அமைத்தவர்கள் .

    ReplyDelete
  13. அக்கினி :
    அக்கினி நெருப்பு திருவிழாக்காலங்களில் வேண்டுதல் பெயரில் அக்கினி சட்டி எடுப்பார்கள் மாரியம்மன் பண்டிகையில் அக்கினி மிதிக்கும் உரிமை பெற்றவர்கள் இவர்களே . அக்கினிவலம் வருதலும் தீ மிதித்தலும் வழிபாட்டு முறைகளாகும் .

    தக்கவர் :
    தக்கவர் தகவிலர் என்று குறள் கூறும் . ஏர்த்தொழிலுக்கு தக்கவராக இருப்பவர்கள் ஊரில் மதிப்புடைமைக்கும் சிறப்புக்கும் தக்கவர்களாக இருப்பவர்கள் தக்கவர்களே .

    நெய்தலி :
    நெய்தல் நிலத்து உழவர்கள் நெய்தலி எனப்பட்டனர். மீனவர் வேறு இவர்கள் வேறு . எந்த நிலத்திற்கும் கொங்கு வெள்ளாளனே காணியாளர்களாம் .

    நீலவினோசலன் :
    நீலன் வேறு வினோசலன் வேறு . நீலம் பண்புப் பெயர் , வினோசலன் வினைப்பெயர் , இவை இரண்டையும் இணைத்து இந்த இருமரபுவழியில் வந்தவர்கள் இவர்கள் .

    சனகன் :
    சனகன் மகள் ஜானகி இராமயணத்தின் கதாநாயகி சனகன் உழதொழில் வேந்தன் அவனது பெயரை சிறப்பிற்காக ஏற்றவர்கள் இவர்கள்

    முனை வீரன் :
    வெள்ளாளன் வீரமறவன் முனைமுகத்து நில்லேல் என்றார் அவ்வை . முனைப்போர் முனை ஒளிருவாள் . அருஞ்சமம் முறுக்கிளிர் எறிந்து வெற்றி பெறுதல் ஆண் மகன் கடமை என்றார் பொன்முடியார் .

    ReplyDelete