ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் ஆலயம் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. Hosur Chandrachoodeswarar

    அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் திருக்கோயில் பெங்களூரில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவிலும், கிருஷ்ணகிரியிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும் ஓசூர் (தருமபுரி மாவட்டம்) அமைந்திருக்கிறது.

    01. அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி
    02. பரணி – ஸ்ரீ துர்கா தேவி
    03. கார்த்திகை – ஸ்ரீ சரவணன் (முருகப் பெருமான்)
    04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணர். (விஷ்ணு பெருமான்)
    05. மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவ பெருமான்)
    06. திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான்
    07. புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்)
    08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
    09. ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
    10. மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
    11. பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி
    12. உத்திரம் – ஸ்ரீ மகாலெட்சுமி
    13. ஹஸ்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி
    14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
    15. சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
    16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
    17. அனுசம் - ஸ்ரீ லெட்சுமி நாராயணர்.
    18. கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
    19. மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர்
    20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
    21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
    22. திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு பெருமான்)
    23. அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணு பெருமான்)
    24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
    25. பூரட்டாதி – ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
    26. உத்திரட்டாதி – ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
    27. ரேவதி – ஸ்ரீ அரங்கநாதன்.

    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...

    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
    புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
    வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
    எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்

    (புல்லாங்குழல் )

    பன்னீர் மலர் சொரியும் மேகங்களே-எங்கள்
    பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்
    தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
    ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களேன்- எங்கள்
    ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களேன்

    (புல்லாங்குழல் )

    குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
    கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
    திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
    ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்- அந்த
    ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன

    (புல்லாங்குழல் )

    பாஞ்சாலி புகழ் காக்க தன்கை கொடுத்தான் - அந்த
    பாரதப் போர்முடிக்க சங்கை எடுத்தான்
    பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
    படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
    படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்.

    (புல்லாங்குழல் )

    ReplyDelete
  2. சந்திரன் வழிபட்ட சிவத்தலங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. அவற்றில் வேலூர் மாவட்டத்திலுள்ள மஹேந்திரவாடியும் ஒன்று. சந்திரன் வழிபட்ட காரணத்தினால், இத்தலத்திலுள்ள ஈசனின் பெயர் ஸ்ரீ சோமநாதேஸ்வரர். சில தலங்களில் சந்திரன் வழிபட்ட லிங்கங்கள் சோமேஸ்வரர், சந்திர சூடேஸ்வரர், சந்திரசேகரர், என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன.

    சந்திரன் வழிபட்ட தலங்களின் பெயர்கள் கூட, சந்திரனைக் குறித்தே, சில தலங்களில் அமைந்திருக்கின்றன. குறிப்பாக நவக்கிரஹத் தலங்களில் ஒன்றான திங்களூர், புதுச்சேரிக்கருகில் உள்ள பிறையூர், சென்னைக் கருகேயுள்ள சோமங்கலம், வடக்கேயுள்ள சோம்நாத்பூர்.

    ReplyDelete
  3. அசுவனி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங் களும் தக்ஷனுடைய குமாரத்திகள். அவர்களை சந்திரனுக்குத் திருமணம் செய்து வைத்தான் தக்ஷன். தன்னுடைய மனைவிகளில் கார்த்திகை, ரோஹிணி ஆகிய இருவரிடம் மட்டுமே சந்திரன் அன்பு செலுத்தினான். மற்றவர்களை வெறுத்து ஒதுக்கினான். இதனால் கோபம் கொண்ட மற்ற பெண்கள் தன்னுடைய தந்தை யிடம் முறையிட்டனர்.
    இதன் விளைவாக தக்ஷனின் சாபத்திற்கு இலக்கானான் சந்திரன். அழகு நிரம்பிய சந்திரன், அழகு குன்றி, அமுதகலைகள் தேய்ந்து, ரோகத்தினால் வாடினான், தனக்கு ஏற்பட்ட கஷ்டங் களை, ஈசனால் மட்டுமே தீர்க்கமுடியும் என்று நம்பிய சந்திரன் ஈசனைத் தொழுது முறையிட்டான்.
    மனம் மகிழ்ந்த ஈசன், மூன்றாம் பிறையளவு இருந்த சந்திரனைத் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரன் ஆனார். திரும்பவும் சந்திர னின் கலைகள், ஈசனின் அருளால் வளரத் தொடங்கின. தக்ஷனின் சாபத்தினால் தேய்பிறையும், ஈசனின் அருளினால் வளர்பிறையும் ஏற்பட்டன.
    முதலாம் மஹேந்திரவர்மன்
    பல்லவ குல திகலகமான முதலாம் மஹேந்தி ரவர்மன் கி.பி.7ம் நூற்றாண்டில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு, அரசாண்டான் சிறிது காலம் சமணமதத்தில் இவன் இருந் திருந்தாலும், பிறகு மதம் மாறி, சைவனாக இருந்து பல கோயில்களைக் கட்டினான். கி.பி.600 முதல் கி.பி 630வரை இவன் அரசாட்சி, செய்தான் இவன் சிற்பக்கலை இசைக்கலை, ஓவியக்கலை, காவியக்கலை முதலிய கலைகளில் தேர்ச்சி பெற்றவன்.
    அழிவில்லாத இறைவனுக்கு, அழிவில்லாத கோயில் எழுப்ப வேண்டும் என்ற கருத்தில் செங்கலும், சுண்ணாம்பும் கலந்து கோயில் கள் கட்டிய நிலையை மாற்றி, மலையைக் குடைந்து கோயில் கட்டிய மாமன்னன் இவன்.
    இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த அரசன் தன்னுடைய படைகளை தங்க வைக்க ஒரு ஊரை ஏற்படுத்தினான். அந்த ஊருக்கு ‘மஹேந்திரபாடி’ என்ற பெயர் வைத்தான். ‘பாடி’ என்றால் படைகள் தங்கியிருந்த இடம். அவ்வூர் மக்கள் வழக்கில் இன்று மஹேந்திரவாடி என்று அழைக்கப் படுகிறது. இங்கு மஹேந்திரவர்மனால் ஒரு குடைவரைக்கோயில் எழுப்பப்பட்டது. அதற்கு ‘மஹேந்திர விஷ்ணுக்கிரஹம்’, என்று அவன் பெயரிட்டான். இவ்வூரில் அந்த மாமன்னன் ஒரு ஏரியை உண்டாக்கினான். அந்த ஏரிக்கு, பாலாற்றிலிருந்து ஒரு கால்வாய் ஏற்படுத்தி நீரை வரவழைத்தான். அந்த ஏரிக்கு ‘மஹேந்திரதடாகம்’ என்று பெயரிட் டான். ஆனால் இந்த ஊரில் உள்ள ஸ்ரீ சோம நாதேஸ்வரர் கோயில் பிற்காலப் பல்ல வர்களால் கற்களால் கட்டப்பட்டது.

    ReplyDelete
  4. ஸ்ரீ சோமநாதேஸ்வரர் கோயில்:
    இக்கோயில் ஊரில் நடுநாயகமாக உள்ளது. கோயிலைச்சுற்றி ஆக்ரமிப்பு கள். கோயிலைத் தேடிக்கண்டுபிடிப் பதே சிறிது கஷ்டம்தான். ஈசனின் கருவறை கிழக்கு நோக்கியுள்ளது கோயிலின் வாயிலுக்கு முன்புறம் விளக்கு ஏற்றும் ஒரு கல்தூண் உள்ளது. நந்தியெம் பெருமானையும் தூணுக்கு முன்புறம் உள்ள மண்டபத் தில் தரிசிக்கலாம். வடக்குப்புறம் சந்திர புஷ்கரணி உள்ளது. இதில் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
    கருவறையில் ஈசன் ஸ்ரீ சோமநாதேஸ்வரர் சற்றுப் பருத்த பாணத்துடன் அழகுறக் காட்சியளிக்கிறார். கருவறை முன் மண்டபத்தில் தெற்கு நோக்கி அன்னை ஸ்ரீ காமாட்சியைத் தரிசிக்கலாம். மண்டபத்தின் மேற்குப்புறத்தில் ராகு, சந்திரனைப் பிடிப்து போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. நமக்கு வலப்புறம் அரசனும் அரசியும் இறைவனை தொழுவது போன்ற ஒரு சிற்பம் உள்ளது.
    திருச்சுற்றில் முதலில் அஞ்சனை மைந்தனை தரிசிக்கலாம். அடுத்து சந்திரனின் சந்நிதி, தென்மேற்கு மூலையில் கணபதி தரிசனம். அடுத்து வள்ளி, தெய்வானையுடன், ஆறுமுகப் பெருமாளை தரிசிக்கிறோம். பன்னிரு திருக் கரங்களுடன், ஆறுமுகங்களுடன் அந்த கோல மயில் முருகன். மயில் மீது வீற்றிருக்கிறான். அடுத்து ஐயப்பனுக்கு தனிச் சந்நிதி உள்ளது.
    கோட்ட மூர்த்திகளில் முதலில் தெற்கு நோக்கிய தக்ஷிணாமூர்த்தியும், மேற்குப் பார்த்து பெருமாளும், வடக்குப் பார்த்து துர்க்கையும் அருளாட்சி புரிகின்றனர். சண்டிகேஸ்வரருக்கு, தனிச்சந்நிதி உள்ளது. வட கிழக்கில் பைரவருக்கு தனிச்சந்நிதி. அடுத்து முனீஸ்வரரை ஒரு சந்நிதியில் தரிசிக் கிறோம். அங்கே ஒங்கி வளர்ந்த அரசமரங்கள் இரண்டு உள்ளன. அத்துடன் வேம்பும் இணைந் திருப்பது வந்து தரிசனம் செய்பவர்களுக்கு சுத்தமான காற்றைத் தந்து உதவுகிறது. மரத்தடி யில் நாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள் ளன. இக்கோயிலுக்கு, 8.11.2010இல் சீரும் சிறப்புமாக குடமுழுக்கு நடந்தது.
    சந்திரதோஷப் பரிகாரம்
    இங்குள்ள சந்திரபுஷ்கரனியில், திங்கட்கிழமை களில் நீராடி, இறைவனுக்கு அபிஷேகம் செய்வித்து, வெள்ளை அலரி, வெள்ளை அல்லி புஷ்பத்தினால் அர்ச்சித்து, சந்திர கிரஹ மந்திரங்களை ஜபித்து தயிர் சாதத்தை நிவேதனம் செய்தால் சந்திர தோஷம் நீங்கும். மேலும் இத்தலத்தில் நாகதோஷப் பரிகாரமும் செய்து கொள்ளலாம்.
    மற்ற கோயில்கள்-குடைவரைக் கோயில்
    இது ஒரு குடைவரைக் கோயில். அந்த மாமன்னனின் அபரிமிதமான, அறிவாற்றலை யும், கடுமையான உழைப்பையும் நம் கண்முன்னே காட்டும் அரிய படைப்பு. இதற்கு ‘மஹேந்திர விஷ்ணு கிரஹம்’ என்று பெயரிட்டான் அவன். இங்கு நரசிம்மரை அவன் பிரதிஷ்டை செய்தான். தற்பொழுது அச்சந்நிதி காலியாக உள்ளது. அங்குள்ள மண்டபத்தூண் ஒன்றில் கீழ்கண்ட பல்லவ கிரந்த எழுத்துச் சாஸனம் உள்ளது.
    “மஹிததமம் ஸதாமுப மஹேந்திர தாடகமித
    ஸ்திரமுருகாரிதம் குணபரனே விதார்யளிலாம்
    ஜனநயனாபிரம குணதாமி மஹேந்திரபுரே
    மஹதி மஹேந்திர விஷ்ணுக்ருஹா நாம முராரிக்ருஹ”
    இதன் கருத்து:
    மஹேந்திரபுரத்தில், மஹேந்திர தடாகக் கரையில் மேல் உலகத்தாரால் புகழ்ந்து உரைக்கப்பட்டதும், மக்கள் கண்டு களிக்கும் படி அழகுக்கு உறைவிடமானதுமான முராரி (திருமால்) கிருஹத்தை, ‘மஹேந்திர விஷ்ணுகிரஹம்’ என்னும் பெயரினால், குணபரன் என்னும் அரசன் செய்வித்தான்.
    மஹேந்திரவர்மனுக்கு குணபரன் என்ற பெயரும் உண்டு, என்று இதிலிருந்து தெரிகிறது. அவனுக்குப் பல பெயர்கள். விசித்திர சித்தன் என்று கூட அவனுக்கு ஒரு பெயர் உண்டு.

    ReplyDelete
  5. கோட்டைப் பிள்ளையார்:
    இக்கோயில் குடைவரைக்கோயிலுக்கு எதிர்புறம் உள்ளது. இங்கு ஒரு கோட்டை இருந்து அழிந்து விட்டதாகத் தெரிகிறது. ஒரு பாறையில் செதுக்கப்பட்ட விநாயகரைச் சுற்றி கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது.
    இக்கோயிலில் வழிபாடு ஏதும் இல்லை. கோயில் விமானம் மிகவும் அழகாக பல சுதைச் சிற்பங்களோடு, காட்சியளிக்கிறது.
    கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு கிணறு உள்ளது. அங்குள்ள நீர் வெண்மை நிறத் துடன், இளநீர்போன்று சுவையாக உள்ளது.
    இக்கோயிலைத் திருப்பணிசெய்ய எந்த புண்ணியவான் வருவாரோ?
    சப்தமாதா கோயில்:
    (ஏரிக்கரை) இக்கோயிலுக்கு ‘மதகாத்தம்மன்’ என்று ஊரார் பெயர் வைத்திருக்கின்றனர்.
    ஒரு காலத்தில் ஏரி உடையாமல் காத்த பெருமை இவளுக்கு உண்டு. ஆனால் சந்நிதியில் சென்று பார்த்தால் ஒரு தேவி இல்லை. ஏழு தேவிகள் உள்ளனர் என்று தெரியும். கௌமாரி, வராகி மஹேந்திரி, பைரவி பிராம்மி, சாமுண்டி, வைஷ்ணவி, ஆகிய ஏழு மாதர்களோடு, விநாயகப் பெருமானும் வீற்றிருக்கிறார். இதில் பைரவி பிரதான தெய்வமாகக் கருதப்படுகிறது. ஏரியைக் காத்தவள் என்ற காரணத்தினால் ஏரி காத்தம்மன் என்று ஆரம்பத்தில் அழைக்கப் பட்டு ‘ஏகாத்தம்மன்’ என்றும் மக்கள் வழக்கில் வழங்குகிறது. இக்கோயிலுக்கு பல ஊர்களிலிருந்தும் மக்கள் வருகின்றனர். கோயிலுக்கு தாராளமாக அவர்கள் நிதி வழங் குவதால் கோயிலில் பல வசதிகள் செய்யப் பட்டுள்ளன. இக்கோயிலில் தரிசனம் செய்து கெண்டு சிறிது நேரம் வெளியே உட்கார்ந்தி ருந்தால் மனமும் அமைதியாகிறது. தூய காற்று வீசுவதால் நம் கவலைகளை சிறிது நேரம் மறக்க முடிகிறது. அங்கிருந்து பார்த் தால் 108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றான சோளங்கிபுரம் மலை தெரிகிறது.
    மேற்கண்ட கோயில்களைத் தவிர கிராம தேவதைக் கோயிலும், ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோயிலும் இங்குள்ளன.

    ReplyDelete
  6. இவ்வூரில் நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்த அந்தணர் களை மாமன்னன் மஹேந்திரவர்மன் குடியேற்றினான். அவர்களுக்கு ‘பத்தங்கியார்’ என்ற பெயர் ஏற்பட்டது. காஞ்சி மாமுனிவர் மஹா பெரியவர் இந்த குடும்பங்களைச் சேர்ந்த யார் அவரை தரிசித்தாலும், ‘பத்தங்கி’, என்று அன்போடு அழைப்பது வழக்கம்.
    மஹேந்திரவாடிக்கு நான்கு கி.மீ தொலை வில் கீழ்விதி என்ற பெயரில் ஒரு கிராமம் இருக்கிறது. ஒரு காலத்தில் மஹேந்திரவாடிக்கு இது கீழவீதியாக இருந்ததாம். மஹேந்திர வாடியை மேலவீதி என்று சொல்லுவதுண் டாம். இவ்வூருக்கு ‘முன்னூற்று மங்கலம்’ என்ற பெயரும் இருந்திருக்கிறது. ‘முன்னூறு குளங்கள்’ இவ்வூரில் இருந்ததாம். மேலும் வேதம் படித்த அந்தணர்கள் வசித்து வந்ததால் மங்கலம் என்ற சொல்லும் சேர்ந்து முன் னூற்று மங்கலம் என்று அழைக்கப்பட்டது. கீழவீதியே நான்கு கி.மீ தொலைவில் இருப்ப தால் மஹேந்திரவாடி எவ்வளவு பெரிய ஊராக இருந்திருக்கும் என்று ஊகிக்கமுடிகிறது.
    வழித்தடம்
    சோளிங்கர் ரயில் நிலையத்திலிருந்து தென் கிழக்கே 5கி.மீ தொலைவிலும், புகழ் பெற்ற ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி கோயில் கொண்டிருக் கும் நெமிலியிலிருந்து, 7கிமீ தொலைவிலும் இவ்வூர் உள்ளது. காஞ்சியிலிருந்து சோளங்கி புரம் செல்லும் பஸ்கள் மஹேந்திரவாடி வழி யாகச் செல்லுகின்றன. சோளங்கிபுரம் ரயில் நிலையத்திலிருந்தும் நெமிலியிலிருந் தும் ஆட்டோ வசதி உண்டு. நெமிலியிலிருந்து நகரப்பேருந்துகள் நிறைய இயக்கப்படு கின்றன. வாகனத்தில் வருபவர்கள் பங்களூர் செல்லும் சாலையில் பயணித்து காஞ்சிபுரம் அருகேயுள்ள வெள்ளைகேட் என்ற இடத்தில் திரும்பி, அரக்கோணம் செல்லும் சாலையில் வந்து, சேத்தமங்கலம் கேட் என்ற இடத்தில் திரும்பி அங்கிருந்து 15மீமீ தொலைவில் உள்ள மஹேந்திரவாடியை அடையலாம்.

    ReplyDelete