வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னனி. இது குறவன், மலைக்குறவன் சமுதாயத்திற்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காவும் பாடுபட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்சி தமிழ்நாடு மலைக்குறவன் மகாஜன சங்கத்தின் அமைப்பை கலைத்து விட்டு அரசியல் அமைப்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சமுதாய மக்களின் நீண்ட கால கோரிக்கையாக தன் சமுதாயத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க இந்த கட்சி பாடுபடும் என தெரிவித்துள்ளது. சமுதாய அமைப்பாக செயல்படும் பட்சத்தில் இந்த சமுதாயத்தின் கோரிக்கைகள் அரசுக்கு சரியான முறையில் எடுத்து செல்லப்பட முடியவில்லை, இந்த மக்களுக்கு இதனால் சலுகைகளை பெற்றுத் தர முடியவில்லை என்றும், அரசியல் அமைப்பாக மாறி விடும் பட்சத்தில் தங்களுக்கு சலுகைகளை பெற்று விடலாம் எனவும் முடிவு எடுத்திருக்கிறார்கள். இந்த கட்சிக்கு தலைவராக பொள்ளாச்சி தங்கராசு, திருச்சி வெங்கடேஸ்வரன் பொது செயலாளராகவும் செயல்படுகிறார்கள். இந்த கட்சிக்கு தலைமை அலுவலகம் திருச்சிராப்பள்ளியில் செயல்படுகிறது. பச்சை வண்ணத்தில் வில் அம்பு பொறிக்கப்பட்ட வடிவத்தில் கொடியாக இந்த கட்சிக்கு உருவாக்கி உள்ளார்கள்.

    வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னனி என்கிற இந்த கட்சி உருவாகுவதற்கு முன் கடந்த 1975ம் வருடம் தமிழ்நாடு மலைக்குறவன் மகாஜன சங்கம் என பெயரிடப்பட்டு திருச்சியை தலைமை இடமாக வைத்து செயல்பட்டது,அப்பொழுது மாநில தலைவராக திருச்சி என்.சங்கிலியப்பன், மாநில பொது செயலாளராக மதுரை சி. சின்னசாமி, நிர்வாக தலைவராக திருச்சி எம்.செல்லையா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டார்கள். இந்திய அரசாங்கம் சாதி பிரிவின் அடிப்படையில் இந்த இனத்தை ஒரு சில பிரிவுகளை ( உதாரணம்) ; மலைக்குறவன்,மலைவேடன் போன்ற பிரிவை பழங்குடியினர் பட்டியலில் வைத்துள்ளது.மற்ற பிரிவினரை எஸ்.சி என்ற பிரிவில் வைத்துள்ளது. ( உதாரணம்)குறவன்,உப்புக்குறவன்,தப்பக்குறவன், இஞ்சிக்குறவன்,குறசெட்டி,இன்னும் 27 பிரிவுகளில் உள்ள சாதி பெயர்கள்.இந்த மக்கள் ஒரே சாதியின் பெயர்களில் வசித்து வந்தாலும் பல பிரிவுகளில் பிரிக்கப்பட்டதால் அரசாங்க சலுகைகளை இவ்ர்களால் பெற முடியவில்லை.சலுகைகளை பெருவதற்கு இவர்கள் அனைவரையும் மலைக்குறவன் என்று சாதி சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் நீண்ட கால கோரிக்கை.பலவித முயற்சி எடுத்தும்,மாவட்டம் தோறும் உண்ணாவிரதம்,அரசியல் தலைவர்களை சந்தித்து மனுக்களை கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை.சமுதாய அமைப்பை வைத்து கொண்டு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் போராடி பலன் இல்லை என்று இவர்கள் முடிவு எடுத்து இந்த சங்கத்தை கலைத்து விட்டு வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னனி என்ற கட்சியினை துவக்கியுள்ளார்கள்.

    ReplyDelete