கோழி சமையல் முறை பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. 'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு!

    நாட்டுக்கோழியின் ருசியே அலாதியானது. அதன் சுவையும், மணமும் மதுரை மாவட்டத்தில் உள்ள பிரியாணி கடைகளில் தயாராகும் ஸ்பெசல் குழம்பில் தெரிந்துவிடும். கிராமப்பகுதிகளில் கை, கால் உடைந்து கட்டுப்போட்டு படுத்திருப்பவர்களுக்கு நாட்டுக்கோழி
    அடித்து நல்லெண்ணெய் ஊற்றி சூப் குடிக்க கொடுப்பார்கள் அந்த அளவிற்கு சத்தானது நாட்டுக்கோழி. நாவில் நீர் ஊறச் செய்யும் நாட்டுக்கோழியை சமைத்துப் பாருங்களேன்.

    தேவையான பொருட்கள்

    நாட்டுக்கோழி - 1 கிலோ
    சின்ன வெங்காயம் – 100 கிராம்
    தக்காளி – 3
    தேங்காய் பால் - 1 கப்
    மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன்
    குழம்பு மசாலா தூள் – 3 டீ ஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
    மல்லி தூள் – 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி
    சோம்பு - 1 டீ ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - 1கொத்து
    கொத்தமல்லி – சிறிதளவு
    எண்ணெய் – 4 டீ ஸ்பூன்
    உப்பு – தேவையான அளவு

    மசாலா செய்முறை

    சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை நறுக்கி வைக்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இத்துடன் பாதி அளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து நன்றாக வதக்கவும். ஆறவைத்து மிக்ஸிசியில் மசாலாவாக நைசாக அரைக்கவும்.

    குழம்பு செய்முறை

    நாட்டுக்கோழியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். மஞ்சள் தூள், குழம்பு மசாலா சேர்த்து வதக்கவும். இதில் கோழியை சேர்த்து நன்றாக கிளறவும். அப்போது தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும். சிறிது நேரம் விசில் போடாமல் மூடி வைக்கவும்.

    5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கிளறவும். இதனுடன் தேங்காய்பால் சேர்த்து குக்கரை மூடி போட்டு விசில் விடவும். நாட்டு கோழி என்பதால் 5 விசில் வரை விடலாம், அப்பொழுதுதான் நன்றாக வெந்து சாப்பிட சுவையாக இருக்கும். விசில் இறங்கின உடன் மல்லித்தழை தூவவும். காரசாரமான நாட்டுக்கோழி தயார். சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம். பிரியாணிக்கு ஏற்ற சைடு டிஸ் இது.

    ReplyDelete
  2. செட்டிநாடு முறையில் சுவையான கோழி ரசம் (சிக்கன் சூப்) செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
    தேவையான பொருட்கள்
    கோழி(எலும்புடன்) – 1/2 கிலோ
    சின்ன வெங்காயம் – 10
    சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
    மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் – 1
    தக்காளி – 1
    இஞ்சி – 1 துண்டு
    பூண்டு – 5 பல்
    பட்டை, லவங்கம் – தலா 1
    மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
    தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
    மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
    செய்முறை
    இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
    கடாயில் எண்ணெய்
    ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
    வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும்.
    பின்பு சூப்பில் எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்.

    ReplyDelete